17th of December 2013
மாராவில வீரஹேன பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர். நாத்தாண்டி மாராவில வீதியின் வீரஹேன எனும் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நாத்தாண்டி வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாரசிங்க ஆரச்சிகே ஹர்மன் மற்றும் கம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தம்பைய்யா சிவலிங்கம் ஆகிய இருவரே உயிரிழந்தவர்களாவர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாராவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறிச் சாரதி மாராவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மாராவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment