18th of December 2013
வடக்கு கிழக்கு பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் 90 வீதம் முடிவடைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.
விசேட வேலைத்திட்டத்தின் கீழ் தற்காலிகமாக முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதியில் சில குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 2014ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 204 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணரத்ன வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.
மீள்குடியேறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக குறித்த நிதி பயன்படுத்தப்படுமென வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் குணரத்ன வீரகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment