17th of December 2013
180 மரணங்கள் நோயினாலும், 75 மரணங்கள் விபத்துகளாலும், 19 தற்கொலைகளும், 70 மரணங்கள் காரணம் நிரூபிக்கப்படாத வகையிலும் இடம்பெற்றுள்ளன. கடந்த வருடம் வெளிநாட்டில் சுமார் 431 பேர் இறந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த இலங்கையர் 349 பேர் இந்த வருடத் தின் ஒன்பது மாதங்களில் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர்களின் சடலங்களை வெளிநாட்டுவேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கவுன்சிலர் அலுவலகம் ஆகியன இணைந்து நாட்டுக்கு கொண்டு வந்தன. அதிகமான சடலங்கள் சவூதி அரேபியாவிலிருந்தே கொண்டு வரப்பட்டுள்ளன.
அங்கு 110 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டாரில் 47 பேரும் குவைத்; இல் 36 பேரும் இத்தாலியில் 35 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 26 பேரும் இந்தியாவில் 3 பேரும் ஏனைய நாடுகளில் 92 பேரினதும் சடலங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
180 மரணங்கள் நோயினாலும், 75 மரணங்கள் விபத்துகளாலும், 19 தற்கொலைகளும், 70 மரணங்கள் காரணம் நிரூபிக்கப்படாத வகையிலும் இடம்பெற்றுள்ளன. கடந்த வருடம் வெளிநாட்டில் சுமார் 431 பேர் இறந்துள்ளனர்.
No comments:
Post a Comment