Sunday, December 15, 2013

அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டுறவுகள் அமைச்சு அதிகாரிகளுடன் சந்திப்பு!

15th of December 2013
புலிகளின்  முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டுறவுகள் அமைச்சு அதிகாரிகளுடன் சந்திப்பு!

அண்மையில் மிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட புலிகளின் முனாள் உறுப்பினர்  அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமன்ற அங்கத்தவரும், வெளிநாட்டுறவு, பாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும், ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும் காணாமற் போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான   போராளிகள், அரசியல் கைதிகள் நிலைமை, போர் நிமித்தம்  பெண்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகம் ஆதிய குற்றங்கள்பற்றி எடுத்துரைத்தார்.

வடமாகாண ஆளுநரான முன்னைநாள் இலங்கை இராணுவ அதிகாரி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தங்கள் அரசுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் அவர்களுக்கு எடுத்துக்கூறினார்.

இவரோடு உள்ளுராட்சிமன்ற அரச கட்சியைச் சேர்ந்த ஸ்டீவன் புஸ்பராஜா மற்றும் கண்ணன் நாகேந்திரா ஆகியோரும் இச் சந்திப்புகளில் பங்கேற்றனர்.

 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...