16th of December 2013
24 மணிநேரம் கடமையாற்றும் வகையில் தமிழ் மொழி பேசும் 2 ஆயிரத்து 276 பொலிஸாரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்காக சேர்த்து கொள்ள பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி அறியாத பொலிஸார் சேவையாற்றுவதால் தமிழ் மொழியை மட்டுமே அறிந்த தமிழ் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து தனக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி அறிந்த குறைந்தது இரண்டு பொலிஸாரை பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்குமாறு அமைச்சர் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
No comments:
Post a Comment