Sunday, December 15, 2013

இலங்­கையில் யுத்த குற்­றங்கள் இரா­ணு­வத்­தி­னரால் இடம்­பெ­ற­வில்லை: ருவான் வணிக சூரிய!

16th of December 2013
யுத்த கால கட்­டத்தில் இலங்­கையில் நடந்­தவை என்­ன­வென்­பதை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு அறிந்து கொள்ள வேண்டும். உலகின் நடு­நி­லை­யான ஒன்­றியம் பக்­கச்­சார்­பாக நடந்து கொள்­ளக்­கூ­டா­தென இரா­ணுவப் பேச்­சாளர் ருவான் வணிக சூரிய தெரி­வித்­துள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் சபை அமர்­விற்கு முன்னர் இலங்­கையின் உண்மை நிலை பற்­றிய எட்டு வீடியோ காணொ­ளி­களை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கு அனுப்­ப­வுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
யுத்­தத்­திற்கு முன்­னரும் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போதும் இலங்­கையில் என்ன நடை­பெற்­றது? குறிப்­பாக வடக்கில் இரா­ணு­வத்­தினர் எவ்­வாறு செயற்­பட்­டனர் என்­பது தொடர்பில் பாது­காப்பு அமைச்சு எட்டு வீடியோ காணொ­ளி­களை தயா­ரித்து வரு­கின்­றது.
 
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்­பெ­ற­வி­ருக்கும் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் சபை அமர்­விற்கு முன்னர் இக் காணொ­ளி­கள் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கும், அதன் உறுப்பு நாடு­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ் ஒளி­நா­டாக்கள் யுத்­தத்­திற்கு முன்­னரும் யுத்­தத்தின் பின்­னரும் இலங்­கையில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் ்தொடர்பில் சர்­வ­தே­சத்தின் மத்­தியில் புரிந்­து­ணர்­வொன்­றினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்­புக்கள் உள்­ளன.
 
மேலும் இன்று ஒரு சில தீய சக்­தி­களின் செயற்­பா­டு­க­ளினால் இலங்கை மீதும் இரா­ணு­வத்­தினர் மீதும் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 30 வருடங்களாக இடம்­பெற்ற யுத்தம் நிறை­வுக்கு கொண்டு வரப்­ப­டா­விடின் இன்று இலங்­கையும் மத்­திய கிழக்கு மற்றும் இஸ்­லா­மிய நாடு­க­ளைப்போல் தீவி­ர­வாதம் போராட்டம் குண்டு வெடிப்­பு­களில் தினம் தினம் அழிந்து கொண்­டி­ருக்கும்.
 
யுத்த குற்­றங்கள் இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் இடம்­பெ­ற­வில்லை என்­ப­தற்கு எம்­மிடம் பல ஆதா­ரங்கள்் உள்­ளன. அவற்­றினை அடிப்­ப­டை­யாக வைத்தே அவ் எட்டு வீடியோ காணொ­ளி­க­ளையும் தயா­ரிக்­கின்றோம். இதில் உண்­மையே அடங்­கி­யுள்­ளது.
 
சர்­வ­தே­சத்தில் நடு­நி­லை­யாக செயற்­பட்டு வரும் ஐக்­கிய நாடுகள் சபை பக்கச்் சார்­பா­கவோ அல்­லது கருத்­துக்­க­ளுக்கு அமையவோ முடிவெடுக்க கூடாது. இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் மக்களுக்கான பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...