Sunday, December 15, 2013

வட மாகாணசபைக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை: சீ.வீ. விக்னேஸ்வரன்!

16th of December 2013
வட மாகாணசபைக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்டவில்லை என முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
2014ம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் சகல மாகாணங்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாகாண அபிவிருத்திக்காக உள்நாட்டு வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணசபைக்கு 5.831 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேசிய ரீதியான கொள்கை வகுப்புக்களின் போது சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் பாரியளவில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...