16th of December 2013
மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவதற்கென காலஞ்சென்ற பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்பார்த்திருப்பதாக த சண்டே லீடர் ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை நேரில் சந்தித்து இது குறித்து பேசுவதற்கு ஹிருணிகாவும் அவரது தாயாரும் எதிர்பார்த்துள்ளனர்.
காலஞ்சென்ற பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு மேலதிக விசாரணைகளுக்கென எதிர்வரும் ஜனவரி ஆறாம் திகதி எடுக்கப்பட்டதன் பின்னர் மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான தனது நோக்கம் குறித்து ஹிருணிகா பிரேமச்சந்திர பகிரங்கரமாக அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி பதவிக்குப் போட்டியிடுவதற்கான தனது வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இணக்கம் தெரிவிப்பாராயின் மேற்படி வழக்கு விசாரணையின் பின்னர் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அவர் அறிவிப்பாரெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment