Tuesday, December 17, 2013

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு ‘தேசமான்ய தேசகீர்த்தி’ பட்டம்!

17th of December 2013
சர்வதேச தரப்படுத்தலில் மட்டுமல்லாமல் இலங்கையின் பல்லிண  சமூகங்களினதும் அன்பையும்,பாராட்டையும் பெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு இலங்கை கவி சங்கம்,மற்றும் அஸ்கிரி மஹாநாயக்கவின் பதிவாளரும், இச்சங்கத்தின் அதி நிக்காயக்க தேரர் விஜித வல்பொல தேரரினால் தேசமான்ய தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலத்தில் பௌத்த மதகுரு ஒருவரினால் ஒரு முஸ்லிம் அமைச்சர் தமது சமூக அரசியல்,இன உறவு,புரிந்துணர்வு,சேவை மனப்பான்மை என்பவைகள் தொடர்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
 
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம பெற்ற இப்பாராட்டு விழாவில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு இந்த பாராட்டுப் பத்திரம் கையளிக்க்பட்டுள்ளது.
 
அண்மையில் ஜோர்தனை தலைமையகமாக கொண்ட ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட உலகில் 1.7 பில்லியன் முஸ்லிம்களுக்குள் அதி சிறந்த ஆளுமை,செல்வாக்கு செலுத்தும் அரசியல் தலைவர்கள் வரிசையில் இலங்கையிலிருந்து 2013 2014 ஆம் ஆண்டுக்கான அமைச்சர் றிஷாத் பதியுதீன் பெற்றுள்ளது,இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
 
அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்ப கல்வியினை மன்னாரிலும்,அதன் பின்னர்
கொழும்பிலும் தனது உயர் கல்வி கற்று ஒரு பொறியியலாராக பணியாற்றினார்.அப்போது வடக்கில் வாழந்த முஸ்லிம்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்ட போது அமைச்சராக வருவதற்கு முன்னர் தாமும் அவர்களுடன் வெளியேறினார்.
 
இந்த மக்களது வெளியேற்றம்,மற்றும் யுத்த அழிவுகளால் மயானமாகி காணப்பட்ட தமது மாவட்டத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆதங்கம் அவரது உள்ளத்தில் பொதித்திருந்தது.அதனால் அவரை இந்த அரசியலில் அழைத்துவந்தது.
 
தாம் பாராளுமன்றத்திற்கு தெரிவனாது முதல் இன்று வகிக்கும் அமைச்சுப்பதவிகளை கொண்டு பாதிக்கப்ட்ட,தேவையுணர்ந்த மக்களை நாடிச் சென்றும்,சேவை தேடி வரும் மக்களுக்கு முகம் சுழிப்பின்றி தன்னால் ஆன உயர் சேவைகளை வழங்கி வருகின்றார்.
 
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள தேசமாண்ய தேசகீர்த்தி பட்டம் காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...