Tuesday, December 17, 2013

பாராளுமன்றத்தில் பிழையாக குர்ஆனை ஓதி கருத்து வெளியிட்ட மேர்வினை தடுத்து நிறுத்திய ஹூனைஸ் பாரூக் எம்.பி.!!!

17th of December 2013
பாராளுமன்றத்தில் அல்-குர்ஆன் தொடர்பில் பிழையான கருத்துக்களை முன் வைத்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் உரையினை மறித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், அமைச்சர் மேர்வின் சில்வாவின் பொறுப்பற்ற உரையானது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றும் அல்குர்ஆனையும் கொச்சைப்படுத்தும்  செயலென தெரிவித்து அமைச்சர் மேர்வின் சில்வாவின் இந்த உரையினை ஹன்சார்ட்டில் இருந்து உடன் அகற்றுமாறு சபை தலைவரிடம் வேண்டுகோள்விடுத்தார்.
 
பாராளுமன்றம்  இன்று மீண்டும் கூடிய போது பல அமைச்சுக்களுக்கான வரவு செலவு திட்ட விவாதங்கள் இடம் பெற்றன. அப்போது சபையில் உரையாற்ற எழுந்த அமைச்சர் மேர்வின் சில்வா, மாடுகள் தொடர்பில் உரையாற்றினார், அதன் போது இஸ்லாத்தினை சம்மந்தப்படுத்தி தனக்கு தெரியாதவைகளை கற்பனையாக பேசிக் கொண்டிருந்தார்.இதனை அவதானித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், அரசாங்க தரப்பு அமைச்சர் என்பதால் எவருக்கும் எதிர்காமல் சபையில் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.
 
அல்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் ஈமானின் மிகவும் முக்கியமானது.அதனை தொடுவதற்கு கூட விதி முறைகள் இருக்கின்றது.அல்-குர்ஆனுக்கு விளக்கமளிக்கக் கூடியவர் அரபு மொழியில் பரீட்சையமிக்கவராக இருக்க வேண்டும்.
 
ஆனால் அமைச்சர் மேர்வின் சில்வா அவ்வாறு அதனை செய்ய முடியாது.எனவே இவ்வாறான உரைகளை சபையில் ஆற்ற வேண்டாம்.இந்த உரை ஹன்சார்ட்டில் இடம் பெறக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர்  ஹூனைஸ் பாருக் கேட்டுக் கொண்டதற்கமைய அதனை அகற்றுவதாக சபைக்கு தலைமை தாங்கிய தலைவர் கூறினார்.
 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...