Tuesday, December 17, 2013

மேற்குலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை வெளியிட நேரிடும்: மஹிந்த சமரசிங்க!

17th of December 2013
இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க மேற்குலக நாடுகள்
இனியும் முயற்சித்தால் , அந்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை வெளியிட நேரிடும் என மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார் .
 
மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சில நாடுகளின் அரசமைப்பில் ஏனைய சமயங்களுக்கு இடமில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் .
 
பயாகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் , மேலும் தெரிவித்தவை வருமாறு :
 
அண்மையில் இங்கு பயணம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை , சுதந்திர சதுக்கத்திலுள்ள முன்னாள் பிரதமர் டி . எஸ் . சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு முன்னால் பெளத்த கொடி இருந்தது எனக் குற்றஞ்சாட்டினார் .
 
ஆனால் , மனித உரிமை விவகாரத்தில் உலகுக்குப் பாடம் புகட்ட முயற்சிக்கும் நோர்வேயில் புரட்டஸ்தாந்து சமயத்தைத் தழுவிய ஒருவர் வேறு சமயத்தைத் தழுவ முடியாது என்பது சட்டரீதியாக உள்ளது .
 
அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் வந்து போதனை நடத்தியதன் பின்னர்தான் காங்கிரஸ் சபையிலும் , செனட் சபையிலும் பணிகள் ஆரம்பிக்கப்படும் .
 
பிரிட்டிஷ் நாடாளுமன்றில் கிறிஸ்தவ பாதிரியார் வந்து போதனை நடத்தியதன் பின்னர்தான் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் . இவற்றையெல்லாம் அவர் பார்த்ததில்லை .
 
ஆனால் , எமது நாட்டில் அவ்வாறான நிலைமை இல்லை . நமது நாடாளுமன்றில் அமர்வுகள் ஆரம்பிக்கப்படும்போது பெளத்த சமயத்திற்கு அமையவோ அல்லது வேறு சமயத்துக்கு அமையவோ வழிபாடு நடத்துவதில்லை . ஏனெனில் , நாட்டிலுள்ள ஏனைய சமயங்களுக்கும் அரசமைப்பினூடாக நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம் .
 
எனவே , மேற்குலக நாடுகள் எம்மீது இனிமேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்க முயற்சித்தால் அந்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை நாம் எதிர்காலத்தில் வெளியிட நேரிடும் - எனத் தெரிவித்துள்ளார் .
 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...