22nd of December 2013
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் மற்றுமொருவரும்
படுகாயமடைந்துள்ள நிலையில் , தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளொன்றும் சைக்கிளொன்றும் மோதியே இவ்விபத்து சம்பவித்தது .
யாழ் . சிறைச்சாலை உத்தியோகத்தரான சி . சர்வானந்தன் ( வயது 34 ) , இராணுவச் சிப்பாயான ஜி.ஜி. எம் . கங்கொடகெதர ( வயது 21 ) ஆகியோரே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர் .
யாழ் . மல்லாகம் கே.கே. எஸ் . வீதியிலுள்ள மதுவரித் திணைக்களத்திற்கு முன்பாக ரோந்து சென்றுகொண்டிருந்த இராணுவச் சிப்பாயின் சைக்கிளுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்விபத்து தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
No comments:
Post a Comment