Sunday, December 22, 2013

பதுளை, எட்டம்பிட்டி வீட்டில் இயங்கிய ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு: சந்தேகத்தில் ஒருவர் கைது!

22nd of December 2013
பதுளை எட்டம்பிட்டி - பிரதேசத்தில் வீடொன்றில் இயங்கி வந்த துப்பாக்கி தொழிற்சாலை கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த வீட்டில் இருந்து ரி.56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் 25 வெற்றுத் தோட்டக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட நபர் தச்சு தொழிலாளி எனவும் அவருக்கு இரும்பு பெருத்தும் தொழிலும் சிறந்த அனுபவம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment