16th of December 2013
மூன்று உயிர்களை பலியெடுத்த மதுரங்குளி - கரிகட்டிய விபத்தின் கார் சாரதியான பொலிஸ் சார்ஜன் 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பதில் நீதவான் எம்.எஸ்.அப்துல் காதர் நேற்று (15) இரவு இந்த பிணை உத்தரவை பிறப்பித்தார்.
842 இலக்கமுடைய 50 வயதான ஆரச்சிகே கித்சிறி பெரேரா என்ற பொலிஸ் சார்ஜனே விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் புத்தளம் வலய பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகன சாரதியாக செயற்படுகிறார்.
புத்தளம் வலய பொலிஸ் அதிகாரி சுதன் நாகமுல்ல பயணித்த கார் நேற்று அதிகாலை முச்சக்கர வண்டியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியாகினர்.
விபத்தை அடுத்து காரின் சாரதியை புத்தளம் பொலிஸார் கைது செய்தனர்.
விபத்து தொடர்பில் விசாரிக்க பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு தற்சமயம் புத்தளம் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ளன.

No comments:
Post a Comment