Friday,3rd of January 2014
சமூக ஊடக பட்டறை எனும் புதிய நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கைக்கான
அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது . சமூக ஊடக பட்டறை கொழும்பிலுள்ள
அமெரிக்க நிலையத்தில் நடைபெறவுள்ளதுடன் இங்கு ஆரம்பநிலை இடைநிலை மற்றும்
உயர்நிலை சமூக ஊடக பயிற்சி நெறிகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள
முடியும் . ஜனவரி 2 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் .
கடந்த சில வருட காலப்பகுதியில் நாம் குறிப்பிடத்தக்களவு சமூக ஊடக
பயிற்சிகளை நடத்தியுள்ளோம் . மக்களுக்கு சமூக ஊடகத்தின் சிறப்பம்சங்களை
கற்றுத்தருவதற்காக இந்த பயிற்சிகளை நாம் நெறிப்படுத்த விரும்புகின்றோம் என
அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரீல் தெரிவித்தார் .
இலங்கையர்கள் மத்தியில் சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை
ஏற்படுத்துவதுடன் இணையத்தில் மிகவும் சிறப்பான முறையில் மக்கள் செயற்பட
ஊக்குவிப்பதே சமூக ஊடக பட்டறையின் மூலம் நாம் அடைய எத்தனிக்கும் பிரதான
நோக்கமாகும் . இந்த சமூக ஊடக பயிற்சி நெறிக்காக எவரேனும் ஜனவரி மாதம் 2
ஆம் திகதி முதல் 17 ம்திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க தூதரக
இணையத்தளத்தினூடாக
http://goo.gl/1Es2sW
விண்ணப்பிக்க முடியும் . இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது .
விண்ணப்பங்கள் முதலில் கிடைக்கும் ஒழுங்கில் ஜனவரி மாத நடுப்பகுதியில்
விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் பயிற்சிகள் தொடர்பான திகதி மற்றும்
நேரங்கள் அறியத்தரப்படும் . http://srilanka.usembassy.gov/sm_lab.html என்ற முகவரியின் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமெ ரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளத
No comments:
Post a Comment