தேர்தல்கள் ஆணையாளருக்கும், கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்குமிடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மாகாணசபைத் தேர்தல் வாக்காளர் இடாப்பு குறித்து ஆராய்வதே இதன் பிரதான
நோக்கமாகும்.
இந்நிலையில் இவ்வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலானது, 2013 ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படியே நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் சகல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதேவேளை 2013 ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
அதில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், கிராம சேகவர் அலுவலகங்களிலும் மக்கள் பரீட்சிக்க முடியுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை மாவட்ட மட்டத்திலான வாக்காளர் இடாப்பு விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. அதற்கயை அடுத்த வருடம் முழுமையான விபரம் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் சில மாவட்டங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விரைவில் மேல் மற்றும் தென் மாகாணசபைகள் கலைக்கப்பட்டு, தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment