Saturday,4th of January 2014
அடுத்த ஆண்டு மே மாதம் கொழும்பில் ‘உலக இளைஞர் மாநாடு’ நடைபெறவுள்ளதால் 2014ஆம் ஆண்டு இலங்கை இளைஞர்கள் அபிவிருத்தியில் முக்கியமானதாக இருக்குமென தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.
இளைஞர்கள் தொடர்பில் இலங்கையினால் மேற்கொள்ளப்படும் வரவேற்கத்தக்க முயற்சிகள் காரணமாக இலங்கை ஒரு சிறந்த நாடு என்ற சமிக்கையினை வெளிப்டுத்துகின்றதென அவர் தெரிவித்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் அபிவிருத்தி என்பது சமூக நலன் என்ற மனோபாவத்துடன் பேசப்பட்டது எனத் தெரிவித்த அவர் தேசத்தை கட்டியெழுப்பும் பணிக்கு இணையாக அரசாங்கத்தினால் இந்த மனோபாவத்தை மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார். ‘அபிவிருத்தியின் முக்கியத்துவம் மிக்க பிரிவினராக இளைஞர் உள்ளனர்’ என்ற மனோநிலை நாடு முழுவதும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ளது என பெரேரா தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் சர்வதேச ரீதியான நற்பெயரை பெற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் அவர்கள் 2012 இல் வெளியிடப்பட்ட ‘உலக இளைஞர் அபிவிருத்தி’ தொடர்பில் சமர்ப்பித்த பத்திரத்தில் இலங்கை பற்றி 14 தடவைகள் குறிப்பிட்டிருந்தமையானது இலங்கை எவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது என பெரேரா தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு மற்றும் இளைஞர் திறன் ஆகியவற்றை பற்றாக்குறை எதுவுமின்றி நாடு கொண்டிருப்பதன் காரணமாக உலக அளவிலான எந்த ஒரு நிகழ்வையும் நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். சர்வதேச அரங்கில் இளைஞர் தொடர்பில் பேசப்படும்போது போது இலங்கை பற்றியும் பேசப்படும் நிலை விரைவில் உருவாகும் என அவர் குறிப்பிடப்டார். நவம்பர் மாதம் பொதுநலவாய இளைஞர் மாநாட்டை நடத்திய அனுபவத்துடனும் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்யும் ஆற்றலுடனும் உலக இளைஞர் மாநாட்டினை மே மாதம் 6ஆந் திகதி தொடக்கம் 9ஆந் திகதி வரை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த மாநாடு ’2016இற்கு பின்னர் மிலேனியம் அபிவிருத்தி’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
இம் மாநாட்டில் 1,500 வெளிநாட்டு இளைஞர்கள் பிரதிநிதிகளும் 100 உள்ளூர் இளைஞர்கள் பிரதிநிதிகளும் பங்கேற்கபர் என எதிர்பார்க்கப்படுவதாக தவிசாளர்; தெரிவித்தார்.
ஏற்பாட்டுக்குழுவிற்கு இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இணைத் தலைமை வகிப்பதாக தவிசாளர் தெரிவித்தார். பல்வேறு பணிகளை கவனிக்கவென 22 துணை குழுக்கள் காணப்படுகின்றன. அதேவேளை தொனிப்பொருள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக 10 உள்ளுர் உறுப்பினர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்களை கொண்ட இளைஞர் படையணி ஒன்றும் உள்ளது.
மாநாட்டிற்கு இணைவானதாக பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்த அவர் மாநாட்டுடனும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளுடனும் சுமார் 10,000 இலங்கை இளைஞர்களை தொடர்புபடுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். இலச்சினையொன்றை வடிவமைப்பதற்கான போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. இது ஜனவரி மாதம் 31ஆந் திகதி முடிவடையும். ஆர்வமுள்ளோர் தமது ஆக்கங்களை இணையத்தளம் மூலமாக சமர்ப்பிக்க முடியும். மாநாட்டிற்கு இணைவானதாக இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கண்காட்சி, கலாச்சார நிகழ்வு மற்றும் பொது நிகழ்வு ஆகியன இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment