Saturday,11th of January 2014
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேச நாடுகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வருவதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இங்கு யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும், “ஒரே நாடு ஒரே மக்கள் என அரசாங்கம் கூறி வருகின்ற நிலையிலும், தமிழினத்தின் அடையாளங்களை அழித்து ,இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற அரசின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசம் குறிப்பாக, ஐ.நா. ஊதவ வேண்டுமென்றும் சர்வதேச விசாரணையே வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துமிழாராட்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நாற்பதாவது நினைவு தின நிகழ்வு, யாழ். வீருசிங்கம் மண்டபத்திற்கு முன்னாலுள்ள நினைவுத் தூபியில் நேற்றுக் காலை நடைபெற்றபோது அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் சம்பவம்ஙகள் இன்றும் எம் கண்முண்னே இருக்கின்றது. இதேபோன்று இதற்குப் பின்னரான தற்போதைய நிலையிலும் எத்தனையோ பல துன்பங்களும், துயரங்களும் நடந்துள்ளது, நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
அதாவது, 1974, 1981, 1984 கலவரமென இப்போது மிகப்பெரிய பேரழிவுக்குப் பின்னர், எத்தனையே உயிரிழப்பிற்குப் பின்னரான நிலையிலேயே மனித உரிமையாளர்கள் மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இலங்கை மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக எமது மக்களை பல வழிகளிலும் நடத்திய போராட்டங்கள் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காகவும், தமிழின விடுதலைக்காகவும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட பல இலட்சக்கணக்கானோரை நாம் இழந்திருக்கின்றோம். அத்தொடு அந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள் எமது மக்களை எந்தளவிற்குப் பாதித்திருக்கின்றது. எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதனை இன்றைய நிலையில் பார்க்கக்கூடியதாக உள்ளது.
இந்த நாட்டின் ஆட்சியிலிருக்கின்ற அரசாங்ககங்கள் இவ்வாறு படுகொலை செய்தும், பல்லாயிரக்கணக்கானோரை கடத்தியும் இருக்கின்றது என இன்று அரசிற்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு, அதனை விசாரிக்கப்பட வேண்டுமென சர்வதேசத்திலேயே வலுவானதொரு கோரிக்கை
விடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், அடுததமாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப்
பேரவையில் எடுக்கவுள்ள தீர்மானங்களில், இந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இதில் குறிப்பாக, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய, நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரனையே இந்த அரசின் போர்க்ககுற்றங்களுக்கு எதிராக விசாரிக்கப்பட வேண்டுமென்ற பிரேரணையே முக்கியத்துவம் பெற இருக்கின்றது.
அதாவது, இம்முறை நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத் தொடரிலும், இங்கு இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கு எதிராக சர்வதேச விசாரணையை கோருகின்றோம். இங்கு இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளார்கள், இதற்கான பதிலை அரசாங்கமே சொல்ல வேண்டும். இங்கு இடம்பெற்றதற்கு எதிரான உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோம்.
குறிப்பாக, நாங்கள் ஏற்கனவே அறிவித்ததுபோன்று, ஜெனிவாவில் இம்முறையும் கொண்டு வரப்படவுள்ள அந்தப் பிரேரணை வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்க வேண்டுமென, சர்வதேச நாடுகளைக் கோரி வருகின்றோம். அந்தப் பிரேரணை நாம் தொடர்ந்தும் சர்வதேச ரீதியாக உழைப்போம்.
ஏனெனில், இங்கு கடந்த 1974ம் ஆண்டு மட்டுமல்ல, தொடர்ந்து காலங்காலமாக இவ்வாறான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு நீதி கிடைக்கவில்லை. இங்கு எந்தக்காலத்திலும் அது கிடைக்குமென்ற நம்பிக்கையும் இல்லை.
இந்நிலையில், தற்போதும் எமது இனத்தை கூண்டோடு அழிக்கின்ற நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு தீர்க்கமான விசாரணை நடத்துமென்றோ அல்லது இனத்தின் விடுதலைக்கான தீர்வையோ இந்த அரசாங்கம் கொடுக்கிமென்ற நம்பிக்கையும் இல்லை.
ஆகவே, இத்தகையப் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், சர்வதேசமே எமக்கு எல்லாம் செய்யுமென நாம் விட்டு விடாமல், தொடர்ந்தும் இராஜதந்திர ரீதியாகச் செயற்பட வேண்டும். சர்வதேச ரீதியாக அரசிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் இன விடுதலைக்கான தகுந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். அல்லது அரசிற்கு எதிராக சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு இரானுவதந்திர ரீதியாக அனுகி, நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு, சர்வதேச ரீதியாக வெற்றி பெறுவதற்கு நாங்கள் எல்வோரும் உழகைக வேண்டும். சர்வதேச ரீதியாக நாட்டில் இழைக்கப்படுகின்ற போரக்குற்றங்களுக்கு எதிராக தீர்மானம் எடுப்பதற்கு நீண்ட காலங்கள் எடுக்கிறது. ஆனால், இங்கு அவ்வாறில்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
ஏனெனில், இமது இனத்தை அழிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே, எமது இனத்தின் அடையாளங்களை அழிக்கின்ற அரசின் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசம் குறிப்பாக, ஐ.நா. உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம். அத்தோடு, இங்கு இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்புகளும் நிறுத்துவதற்கு உதவ வேண்டும்.
தமிழினமாகவும், தமிழ் மண்ணாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அத்தோடு சர்வதேசத்தின் கனவத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment