Wednesday, December 4, 2013

மக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்!

5th of December 2013
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் இனத்திற்கு எதிராக எதுவும் கூறப்பட வில்லை. மாறாக நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே கூறப்பட்டுள்ளது. எனவே, இதனை வட மாகாணத்தில் அமுல்படுத்த மாட் டேன் என்ற முதலமைச்சர் விக்னேஸ் வரனின் கூற்று தவறானதாகும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
மக்களின் வேலைத்திட்டங்கள் தொடர் பில் ஆராயப்படும் மாவட்ட அபிவிருத் திக்குழுக் கூட்டத்தில் கூட பங்குகொள் வதை பகிஷ்கரிக்கும் முதலமைச்சருடன் எவ்வாறு பிரச்சினைகள் தொடர்பில் பேசித் தீர்வை காண முடியும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
 
வரவு - செலவுத் திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் குறிப்பிடு கையில், மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் ஊடாகவே வட மாகாணமும் அபிவி ருத்தி செய்யப்பட்டது.
 
எனவே, இதனை எக்காரணத்தைக் கொண்டும் அமுல்படுத்த மாட்டேன் என்று கூறுவதை விடுத்து வட மாகாண முதலமைச்சர் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
 
புலிகள், புலிகள் என்று கூறுவதை விடுத்து நாட்டின் அபிவிருத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்ற சுரேஷ் பிரேமச்சந்திரனின் கூற்றை நான் வரவேற்கின்றேன். ஆனால் இதற்கு அந்த மாகாணத்தின் முதலமைச்சர் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வட மாகாண தேர்தல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், சர்வதேசத்திற்கு அடிபணிந்து எந்த ஒரு தீர்மானத்தை எடுப்பவரல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் வெற்றியைப் பெறும் என்பது எமக்கு தெரியாமல் தேர்தல் நடத்தப்படவில்லை.
 
என்றாலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தென்பகுதி மக்கள் அனுபவிக்கும் நன்மையை வடக்கு, கிழக்கு பிரதேச மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்குடனே ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய பசில் ராஜபக்ஷ அமைச்சரின் பங்களிப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...