Wednesday, December 4, 2013

புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை மீளக்குடியேற்ற கோரிக்கை: மொஹமட் முஸ்ஸாமில்!

5th of December 2013
புலிகளினால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றுமாறு தேசிய சுதந்திர முன்னணி, மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அந்த கட்சியின் அமைப்பின் பேரில் அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் கடிதம் மூலம் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு 2013 ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் 23 மூன்று வருடங்கள் பூர்த்தியானது. மூன்று தசாப்தங்களாக வடக்கில் இருந்து வந்த புலிகளின் பயங்கரவாதம் தோற்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ளது.
 
வடக்கின் இனவாத புலிபயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த சகலரையும் அரசாங்கம் முதலில் குடியேற்றியிருக்க வேண்டியதே முதன்மையான பணியாகும்.
 
இது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடையில் தேசிய ஜக்கியத்தை ஏற்படுத்தும் அடிப்படை தேவை என்பதை புதிதாக உங்களுக்கு கூற தேவையில்லை.

எனினும் வடக்கில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்வதில் உரிய செயற்பாடுகளை உங்களது அமைச்சு மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.
 
வடக்கில் இருந்து புலிகளினால்  வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்களவர்களின் குடும்பங்கள் பற்றிய உரிய புள்ளிவிபரங்கள் கூட அமைச்சிடம் இல்லாதிருப்பது பாரதூரமான நிலைமையாகும்.
இதனால் வடக்கில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை மீள்குடியேற்றம் செய்ய நோக்கில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் விபரங்களை பதிவுசெய்ய செயலகம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
 
கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், கந்தளாய் நகரங்களில் இந்த செயலங்கள் அமைக்கப்பட வேண்டும். செயலங்களில் தம்மை பதிவு செய்யுமாறு ஊடங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்.
 
அவ்வாறு தம்மை பதிவு செய்து கொள்ளும் குடும்பங்களை அடையாளம் கண்டு உரிய வழிமுறை மூலமாக அவர்களை வடக்கில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என முஸ்ஸாமில் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் உடன்படிக்கை!

5th of December 2013
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் தம்மிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை 05-12-2013 வியாழக்கிழமை (இன்று) கைச்சாத்திடுகின்றன.
 
இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறை மாணவர்களில் நிதிக்கணக்கியலில் சிறந்துவிளங்கும் மாணவர்கள் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தங்கப்பதக்க விருதினைப் பெறுவதுடன்
 
கணக்கியல் துறை மாணவர்கள் கல்விசார் மற்றும் தொழில்சார் நலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதிக்கான கிளை கலைக்கப்பட்டுள்ளது!

5th of December 2013
இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதிக்கான கிளையின் நிர்வாகம் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவினால் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை இன்னமும் வெளியிடப்பட்டிருக்காத போதும், கலைக்கப்படுவதற்கான கடிதம் கட்சியின் பொதுச் செயலாளரினால் தொகுதிக் கிளையின் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
கலைக்கப்பட்டதற்கான காரணங்கள் இதுவரையிலும் தமிழரசுக் கட்சியினால் தெரிவிக்கப்படவில்லை.

யாழ். மாவட்டத்தில் சுதந்திர மாணவர் முன்னணி உருவாக்கம்!

5th of December 2013
சுதந்திர மாணவர் முன்னணி எனும் அமைப்பொன்றை யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கியுள்ளது.இந்த அமைப்பு உருவாக்கம் தொடர்பான நிகழ்வு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த தலைமையில் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார். இந்த அமைப்புக்கு யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இந்த உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் கிராம அலுவலர்களின் கீழ் சமூகங்களிலுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்காகவும் செயற்படுவர் என மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
 

மக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்!

5th of December 2013
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் இனத்திற்கு எதிராக எதுவும் கூறப்பட வில்லை. மாறாக நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே கூறப்பட்டுள்ளது. எனவே, இதனை வட மாகாணத்தில் அமுல்படுத்த மாட் டேன் என்ற முதலமைச்சர் விக்னேஸ் வரனின் கூற்று தவறானதாகும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
மக்களின் வேலைத்திட்டங்கள் தொடர் பில் ஆராயப்படும் மாவட்ட அபிவிருத் திக்குழுக் கூட்டத்தில் கூட பங்குகொள் வதை பகிஷ்கரிக்கும் முதலமைச்சருடன் எவ்வாறு பிரச்சினைகள் தொடர்பில் பேசித் தீர்வை காண முடியும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
 
வரவு - செலவுத் திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் குறிப்பிடு கையில், மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் ஊடாகவே வட மாகாணமும் அபிவி ருத்தி செய்யப்பட்டது.
 
எனவே, இதனை எக்காரணத்தைக் கொண்டும் அமுல்படுத்த மாட்டேன் என்று கூறுவதை விடுத்து வட மாகாண முதலமைச்சர் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
 
புலிகள், புலிகள் என்று கூறுவதை விடுத்து நாட்டின் அபிவிருத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்ற சுரேஷ் பிரேமச்சந்திரனின் கூற்றை நான் வரவேற்கின்றேன். ஆனால் இதற்கு அந்த மாகாணத்தின் முதலமைச்சர் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வட மாகாண தேர்தல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், சர்வதேசத்திற்கு அடிபணிந்து எந்த ஒரு தீர்மானத்தை எடுப்பவரல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் வெற்றியைப் பெறும் என்பது எமக்கு தெரியாமல் தேர்தல் நடத்தப்படவில்லை.
 
என்றாலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தென்பகுதி மக்கள் அனுபவிக்கும் நன்மையை வடக்கு, கிழக்கு பிரதேச மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்குடனே ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய பசில் ராஜபக்ஷ அமைச்சரின் பங்களிப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Tuesday, December 3, 2013

UN ஆணையகத்தின் விசேட பிரதிநிதி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்!

4th of December 2013
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசேட பிரதிநிதி சலோகா பியானி தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 03 டிசெம்பர் 2013 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.
 
மேலும் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின் அப்பிரதேச மக்களின் மீளக்குடியமர்வு, அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு, தொழில் வாய்ப்புக்கள், மனித உரிமை மேம்பாடு ஆகியவற்றிற்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் அவர்களின் அரசாங்கமும் மேற்கொண்ட திட்டங்களை ஆளுநர் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வட மாகாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆளுநர் விபரித்தார்.
ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்) திரு.இ.உமாகாந்தன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நீர்கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சுவிஸ் பிரஜையின் 400 டொலர் பணத்தை திருடிய ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது!

4th of December 2013
நீர்கொழும்பு உல்லாசத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுவிஸ் பிரஜை ஒருவரின் 400 டொலர் பணத்தை திருடிய இருவர் நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 குறித்த ஹோட்டலில் பணியாற்றும்;; ஊழியர்கள் இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர். ஹோட்டலின் 'ரூம் போய்' ஒருவரே அந்த சுவிஸ் பிரஜையின் பயணப் பொதியிலிருந்த 400 டொலரினை திருடியுள்ளார். பின்னர் அந்தப் பணத்தில் 100 டொலரினை ஹோட்டல் மேற்பார்வையாளரிடம் கொடுத்துள்ளார.;
 
தனது பணம் திருடப்பட்டமை தொடர்பில் சுவிஸ் பிரஜை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, நீர்கொழும்பு பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தமிழக அரசியல்வாதிகளின் படகுகளே இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடுகின்றன ராஜித சேனாரட்ன!

4th of December 2013
தமிழக அரசியல்வாதிகளின் படகுகளே அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
 
பெரும்பான்மையான தமிழக மீன்பிடிப் படகுகள் வாரத்திற்கு மூன்று தடவைகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அத்து மீறல்களில் ஈடுபடும் படகுகளின் உரிமையாளர்கள் தமிழக அரசியல்வாதிகளே என தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் இவ்வாறு அத்து மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபட்டால் மட்டுமே படகுகள் வழங்கப்படும் என படகு உரிமையாளர்கள் மீனவர்களுக்கு நிபந்தனை விதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடிப்பதனால் 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடாந்தம் நட்டம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நெடுந்­தீவு பிர­தேச சபையின் தலைவர் ரொக்­சி­கனின் படு­கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு!

4th of December 2013
நெடுந்­தீவு பிர­தேச சபையின் தலைவர் ரொக்­சி­கனின் படு­கொலை தொடர்பில் வட­மா­காண சபையின் எதிர்க்­கட்சித் தலைவர் கந்­த­சாமி கம­லேந்­திரன் பொலி­ஸா­ரினால் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
 
குறித்த கொலை தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலி­ஸா­ரி­னா­லேயே நேற்று மாலை அவர் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 
கடந்­த­வாரம் கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நெடுந்­தீவு பிர­தேச சபையின் தலைவர் ரொக்­­சிகன் தற்­கொலை செய்­து­கொண்­டி­ருக்­கலாம் என ஆரம்­பத்தில் நம்­பப்­பட்­டது. எனினும் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் மேற்­கொள்­ளப்­பட்ட பிரேதப் பரி­சோ­த­னையின் விளை­வாக அவர் படு­கொலை செய்­யப்­பட்­டமை உறுதி செய்­யப்­பட்­டது.
 
இத­னை­ய­டுத்து விசா­ர­ணைகள் கொழும்­பி­லி­ருந்து சென்ற விசேட குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலிஸ் குழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே நேற்று மாலை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் விசாரணைக்களுக்காக அழைக்கப் பட்டதாக கூறப்படுகின்றது.

புலி­களின் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை: கெஹ­லிய ரம்புக்!

4th of December 2013
இலங்கை::புலி­களின் தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது. அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹ­லிய ரம்புக் வெல நேற்று சபையில் தெரி­வித்தார்.
 
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு - செல­வுத்­திட்­டத்தில் சட்­டமும் ஒழுங்கும் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி ஆகிய இரு அமைச்­சுக்­க­ளுக்­கான நிதி யொதுக்­கீட்டு முன்­மொ­ழிவு தொடர்­பான குழு­நி­லையின் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து பேசு­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார். அமைச்சர் கெஹ­லிய மேலும் கூறு­கையில்,
ஜனநாயகம், சுயா­தீ­ன­மான தேர்தல், புனர்­வாழ்வு மற்றும் மனித உ ரிமைகள் குறித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இந்த சபையில் உரை­நி­கழ்த்­தி­யி­ருந்தார்.
 
அவ­ரது அனைத்து எடுத்­துக்­காட்­டல்­களும் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்றும் நோக்­கமே அடங்­கி­யி­ருந்­தது. சம்­பந்­தனைப் பொறுத்­த­வ­ரையில் அவ­ரது உரை­யா­னது புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்­கா­கவே அமைந்­தி­ருந்­தது.
 
யுத்­தத்தில் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்டு விட்ட போதிலும் நாண­யத்தின் இன்­னொரு பக்­க­மாக புலம்­பெ­யர்ந்தோர் இன்னும் செயற்­பட்டு வரு­கின்­றனர். அவற்றின் பிர­தி­ப­லிப்­பில்தான் ஐ.நா. மனத உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் நவ­நீ­தம்­பிள்ளை மற்றும் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் ஆகி­யோரின் செயற்­பா­டு­களும் அமைந்­தி­ருந்­தன.
 
மேலும் கூட்­ட­மைப்பின் சிறி­தரன் எம்.பி. புலி­களின் தலை­வரை போராட்ட வீர­ராக வர்­ணித்­தி­ருந்தார்.
கே.பி.யை தெரி­யாது என்று சம்­பந்தன் எம்.பி. கூறி­னாலும் பிர­பா­க­ர­னுக்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­வில்லை என்று அவரால் கூற­மு­டி­யாது. அப்­படி சொல்­வா­ரெனில் சிறி­தரன் எம்.பி. யின் உரையை அவர் வாபஸ் பெற­வேண்டும்.
 
மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழர் தாயகக் கொள்கையை இன்னும் கைவிட்­ட­தாக இல்லை. அது தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. அந்த வகையில் பார்க்கும் போது புலி­களின் நாண­யத்தில் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.
 
பாதுகாப்புப் படை இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த சுதந்திரமானது. தற்காலிக மானது என்பதையே இது சுட்டி நிற்கிறது. இதற்கு இடம்கொடுக்க முடியாது என்றார்.

ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சந்திப்பு!

4th of December 2013
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஊனா மெக்லே அவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

இச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் சிறுவர் பாதுகாப்பிற்கான தலைவர் திருமதி கர்லைன் பேகர் மற்றும் அந் நிதியத்தின் சிறுவர் பாதுகாப்பு சிறப்பு அதிகாரி கலாநிதி ஹேமலால் ஜயவர்தன அவர்களும் பங்குபற்றினர்.

2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அடிப்படையில் இலங்கையின் சனத்தொகை 20,263,723 (20.26 மில்லியன்)!

4th of December 2013
2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அடிப்படையில் இலங்கையின் சனத்தொகை 20,263,723 (20.26 மில்லியன்)  என என சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கான சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

2011 மற்றும் 2012 இல் இடம் பெற்ற இக்கணக்கெடுப்புக்கமைய சிங்களவர்கள் 15,173,820 (15.17 மில்லியன்), தமிழர்கள் 31,13,247 (3.11 மில்லியன்) உம் இலங்கைச் சோனகர் 18,69,820 (1.86 மில்லியன்), பேகர
37,061 (0.03 மில்லியன்), மலே 40,189 (0.04 மில்லியன்) வேறு இனத்தவர் 29,568  (0.02 மில்லியன்) ஆவார் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இக்கணக்கெடுப்புக்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளதுடன் 2013 ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை 1732,277,222.79 ரூபா செலவாகியுள்ளதோடு இதில் 868,742,666.72 ரூபா கணக்கெடுப்புக்கான ஊதியத்துக்காக செலாவாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அமுனுகம இதனைக் குறிப்பிட்டார்.

சிங்களவர் 15.17 மில்லியனில்  14.22 மில்லியன் (14,222,844) பேர் பௌத்தர்களாவர். இந்துக்கள் 2,554,806 (2.55 மில்லியன்), இஸ்லாமியர் 1,967,227(1.96 மில்லியன்), ரோமன் கத்தோலிக்கர் மற்றும் வேறு கிறுஸ்தவர்கள் 1,509,606 (1.50 மில்லியன்) மற்றும் வேறு மதத்தினர் 9,440 (0.009 மில்லியன்) ஆவர்.

இலங்கையில் வீடுகளின் எண்ணிக்கை 5,165,331 ஆகும் அவற்றுள் அதிகமான வீடுகளாக 592,064 வீடுகள் கம்பஹா மாவட்டத்திலேயே அமைந்துள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 555,926 வீடுகளும் குறைந்தளவான வீடுகள் மன்னார் மாவட்டத்தில் 23,338 வீடுகள் அமையப்பெற்றுள்ளன.

Monday, December 2, 2013

நிலவில் இறங்கி ஆராய ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது சீனா!

3rd of December 2013
பீஜிங்::நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக ‘சேஞ்ச்-3’ என்ற ஆளில்லா விண்கலத்தை சீனா நேற்று முன்தினம் இரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக ‘சேஞ்ச்-3’ என்ற விண்கலத்தை ‘லாங் மார்ச் 3பி’ ராக்கெட் மூலம் சீனா நேற்று முன்தினம் இரவு விண்ணில் செலுத்தியது. நிலவில் இறங்கி ஆராயும் சீனாவின் முதல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து இத்திட்டத்தின் சீன ஆய்வுக் குழுவின் துணை கமாண்டர் லீ பென்செங் கூறியதாவது:

மிக சக்திவாய்ந்த லாங் மார்ச்-3பி ராக்கெட் மூலம் சேஞ்ச்-3 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது தற்போது புவி சுற்றுவட்டபாதையில் திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் இந்த மாத மத்தியில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலவில் கால் பதிக்கும் சீனாவின் முதல் விண்கலம். நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக, இந்த விண்கலத்தில் ரோபோடிக் ரோவர், டெலஸ்கோப் ஆகியவை உள்ளது.

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி எந்த நாட்டுடனும் போட்டியிடுவதற்காக நடத்தப்படவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் பிறநாடுகளின் ஒத்துழைப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக இந்தியா போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட சீனா விரும்புகிறது. இவ்வாறு லீ கூறினார்.

தாய்லாந்தில் கலவரம்: பேச்சுவார்த்தைக்கு தயார் - பதவி விலகமாட்டேன் - பிரதமர் மறுப்பு!

3rd of December 2013
பாங்காக்::அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். ஆனால் பதவி விலக  முடியாது என்று தாய்லாந்து பிரதமர் சினவத்ரா கூறியுள்ளார். தாய்லாந்தில் பெண் பிரதமர் யுங்லுக் சினவத்ரா தலைமைலான ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006ல் ஊழல் செய்ததற்காக இவரது சகோதரர் தக்ஷி சினவத்ராவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, இவர் ஆட்சியை பிடித்தார். இந்நிலையில், சமீபத்தில் அரசியல் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் சட்ட மசோதாவை பிரதமர் நிறைவேற்றினார். இது அவரது சகோதரரை காப்பாற்றும் முயற்சி என்றும், ஆனால் தக்ஷின் தான் உண்மையில் அதிகாரத்தை கையில் வைத்திருப்பதாகவும், சினவத்ரா பொம்மை ஆட்சி செய்வதாகவும் எதிர்கட்சி எம்பி சுதிப் தாக்ஸ்பான் கூறுகிறார்.

இவரது தலைமையில் பாங்காக்கில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பாங்காக்கில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுதிப், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை செய்த பின்னர்  பிரதமர் பதவிலிருந்து விலக 2 நாள்கள் கெடு விதிப்பதாகவும், ஆட்சி அதிகாரத்தை மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நேற்றும் அரசு மற்றும் போலீஸ் தலைமையகம் ஆகியவற்றை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மேல் கலவரக்காரர்கள் கற்களை எறிந்தனர். கலவரம் பெரிதானதை அடுத்து போலீசார் அவர்கள் மேல் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கலவரக்காரர்களை கலைத்தனர்.

இந்நிலையில் , பிரதமர் சினவத்ரா இருநாள் காலக்கெடுவை நிராகரித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ கலவரத்தை அடக்கி அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கலவரத்தை கட்டுபடுத்த ராணுவம் தயார் நிலையில் உள்ளது. ஆனால் பதவியை விட்டு விலகமுடியாது. அரசியலமைப்பு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் மன்றத்திடம் பொறுப்பை அளிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அனைவருடனும் நிபந்தனைகள் இன்றி பேச்சு நடத்த தயாராக உள்ளேன். ’ என்று கூறினார்.

பிரதமர் சினவத்ரா, சட்டம் ஒழுங்கு கண்காணிப்பாளராக துணைபிரதமர் சுரபாங் டோவிசக்காய்குல்லை நேற்று நியமித்துள்ளார். ஆனால், இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் ‘போலீசார் மீது உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவோம்’ என்று எதிர்கட்சி குழு உறுப்பினர் சும்போல் ஜுல்லாசாய் கூறினார்.

எக்ஸ்ட்ரா தகவல்

சினவத்ரா
தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர். 45 வயதில் இவர் பிரதமர் ஆனதால், தாய்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...