Monday, December 30, 2013

தேர்தல்கள் செயலகத்தின் புதிய தீர்மானம்!

31st of December 2013
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் விருப்பு வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்குள் வேட்பாளர்களை அனுமதிப்பது குறித்து தேர்தல்கள் செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.
 
எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் இந்த முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்சியின் வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட பின் விருப்பு வாக்கு எண்ணும் தருணத்தில் வேட்பாளரை உள் அனுமதிக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
 
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் இவ்வாய்ப்பு வழங்கப்பட மாட்டதெனவும் வெற்றிபெறும் கட்சியின் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் அடிப்படையில் அடுத்த தேர்தலில் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தின் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.
 
இதற்கு முன்னர் ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு மாத்திரமே விருப்பு வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3ம் திகதி சந்திக்க தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.
 
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பாகவே அமையும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

தமிழ்-முஸ்லிம் மக்களிடையில் இன முரண்பாட்டை ஏற்படுத்த மறைமுக சதி - ரவூப் ஹக்கீம்!

31st of December 2013
கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்டத்தை இன்று (31) செவ்வாய்க்கிழமை நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் உறுதி அளித்துள்ளனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் அவர்கள் உறுதியளித்தனர்.
 
30-12-2013  திங்கட்கிழமை மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை நிந்தவூரிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.எம்.ஹசனலியின் இல்லத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 
கட்சி தலைவரின் வேண்டுகோளின்படி தங்களுக்கான முரண்பாடுகளை கலைவதற்கும் ஒற்றுமையாக செயற்படுவதற்கும் கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்தனர்.
 
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,
 
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளம் கல்முனை
என கூறிவிட்டதோடு அதனை உடைக்க பல சக்திகள் மறைமுகமாக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த சதித் திட்டத்திற்கு ஆளாகாமல் நாங்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டி இருக்கிறது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான முயற்ச்சிகளும் தற்போது கட்டவிழ்த்தப்பட்டிருக்கின்றன.
 
அவற்றில் இருந்து இரண்டு சமூகங்களும் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. இவ்வாறான மறைமுக சக்திகளின் ஊடுருவல்களிலிருந்து தம்மை விடுவித்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். எனவே மிகவும் அவதானத்துடனும் புரிந்துணர்வுடனும் நாம் செயற்பட வேண்டும்´ என தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் கொட்டாஞ்சேனை ஆடைத் தொழிற்சாலைக்கு பாரிய சேதம்!

31st of December 2013
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
கொழும்பு, கொட்டாஞ்சேனை – பரமானந்த விகாரை மாவத்தையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
கொட்டாஞ்சேனை பொலிஸார் மற்றும் கொழும்பு தீயணைப்புப் படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
 
தீயினால் ஏற்பட்ட நட்டம் இன்னும் கணிப்பிடப்படவில்லை.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளார்!

30th of December 2013
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளார்.
 
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விக்கினேஸ்வரன் மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

ai2130th of December 2013
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் , அரசாங்கத்துடன் இணைந்து
செயற்பட தயாராகவே உள்ளார் . ஆனால் சம்பந்தனின் பிடிவாதமே விக்னேஸ்வரனை தடுக்கின்றது . தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் இணைத்தால் அதுவே ஜனநாயகத்தின் பெரிய வெற்றியாகும் விக்கினேஸ்வரனின் சம்பந்தியுமான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் .
 
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
 
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அரசாங்கத்துடன் இணங்கி வட மாகாண செயற்பாடுகளை நடத்தவே விரும்புகின்றார் . வடக்கிற்கான அபிவிருத்திகளை தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று அமைதியாக ஆட்சி நடத்த வேண்டுமென்பதே வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அவாவாகும் . எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பிடிவாதமும் அரசாங்கத்துடன் முரண்படுவதன் காரணத்தினாலேயே விக்கினேஸ்வரன் எம்முடன் இணைந்து செயற்பட முடியாதுள்ளது . இன்று அரசாங்கத்திற்கு இருக்கும் பெரிய சிக்கல் தமிழ்தேசியக் கூட்டமைப்பே ஆகும் . அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்பதே உண்மை . சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் தூண்டி விட்டு தனி தமிழ் ஈழத்தினை உருவாக்கவே சம்பந்தன் நினைக்கின்றார் .
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் யதார்த்தமானவை அல்ல . தனி இராச்சியத்தினை கோரி சுய ஆட்சிக்கான அடித்தளத்தினையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது . இதனை எந்த அரசாங்கம் வந்தாலும் நிறைவேற்ற முடியாதென்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . எந்த இனத்தவரும் யாருக்கும் அடிமைகளில்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதனாலேயே வட மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தினார் .
 
வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறுமென்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும் . எனினும் தெற்கைப் போன்று சுதந்திரமாக செயற்படக்கூடிய மாகாணமாக வடக்கும் இருக்க வேண்டும் . வடக்கு மக்களுக்கென சுதந்திரமாக செயற்படவும் தமது விருப்பங்களை நிறைவேற்றும் உறுப்பினர்கள் வடக்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது .
 
எனவே நிறைவேறாத கொள்கைகளுக்காக கூட்டமைப்பு போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுத்து ஜனநாயக ரீதியிலான ஆட்சியினை நடத்த இணங்க வேண்டும் . அதுவே இன்றைய கால சூழ் நிலையின் தேவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார் .

Friday, December 27, 2013

இந்திய –இலங்கை மீனவர்கள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் சந்திப்பு!

28th of December 2013
இலங்கை –இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறலாமென மன்னார் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் ஜெஸ்டின் சொய்ஷா தெரிவித்துள்ளார்.
 
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இந்திய –இலங்கை மீனவர்களுக்கிடையிலான குறித்த கலந்துரையாடல் இந்தியாவில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டது.
 
இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்து வருவதுடன், அண்மையில் திருகோணமலை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
இப்பிரச்சினை மிகவும் உக்கிரமடைந்துள்ள நிலையில், இருநாட்டு கடற்படையினரும் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்து வருகின்றனர். அத்துடன், இருநாட்டுக்கும் இடையிலான கடற்பகுதியில், இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் முறுகல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இளைய சமூகம் தமிழர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்- யாழ். மாவட்டத்தில் கலைத்துறையில் இரண்டாம் இடம்பெற்ற மாணவி தாட்சாயிணி!

28th of December 2013
இன்றைய இளைய சமுதாயம் எமது தமிழர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என யாழ். மாவட்டத்தில் கலைத்துறையில் இரண்டாம் இடத்தை பெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி தாட்சாயிணி மனோகரன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சட்டத்துறை விரிவுரையாளராக பணியாற்றி சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டுமென்பதே என் பூரண இலக்கு. நான் தரம் ஒன்றை அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும் பின்னர், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்றேன். புலமைப் பரிசில் பரீட்சையில் 102 புள்ளிகளையே பெற்றேன்.
 
சாதாரண தரத்தில் 6ஏ, 3சி களை பெற்றபோதும் கலைப் பிரிவையே தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொருவரும் தமக்கு பொருத்தமான துறைகளை தேர்ந்தெடுக்கும்போதே வாழ்வில் சோபிக்க முடியும் என்பதே என் சொந்த அபிப்பிராயம்.
 
நான் பாடங்களை கஷ்டப்பட்டு படித்ததை விட இஷ்டப்பட்டே படித்தேன். அதன் விளைவே இந்த மகத்தான வெற்றி. வெறுமனே கல்வியில் மட்டுமே அக்கறை செலுத்தாது பேச்சு, விளையாட்டு என சகல துறைகளிலும் ஈடுபட்டேன்.
 
அன்றாடக் கல்வியும், மேலதிக வாசிப்பும் என் வெற்றிக்கு மேலும் ஒரு வெற்றி. வறுமை என்பது கல்விக்கு தடை என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நானும் பல பொருளாதார இடர்களின் மத்தியிலேயே எனது கல்வியை தொடர்ந்தேன்.
 
ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான்’ என்பார்கள். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல கோடி.
 
நான் என் ஆசிரியர் சிவஞானபோதம், அம்மா சிவகுமாரி ஆகியோரை என் இரு கண்களாக கருதுகிறேன். என் வாழ்வில் திருப்பு முனையும் அவர்களே. அவர்களுடன் எனது பாடசாலை அதிபர் நோயல் விமலேந்திரன், ஆசிரியர்கள், மற்றும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எத்தனை இடர்வரினும் அதனையும் தாண்டி எமது சமூகத்திற்கு பணியாற்றுவேன் என்றார்.

யாழ். குடாநாட்டில் இந்து ஆலயங்களில் நிர்வாக முரண்பாடுகள் அதிகம் – கவலையளிப்பதாக கூறுகிறார் அரச அதிபர்!

27th of December 2013
யாழ்ப்பாணத்திலுள்ள பல இந்து ஆலயங்களில் தோன்றியுள்ள நிர்வாக முரண்பாடுகள் கவலையளிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்தார். இத்தகைய முரண்பாடுகள் குறித்து மாவட்டச் செயலகத்துக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு, மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்த அரச அதிபர் மேலும் கூறுகையில், ஆலய நிர்வாக முரண்பாடுகள் குறித்து அதிகளவான முறைப்பாடுகள் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றன.
 
எந்தவொரு நிர்வாகங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் ஏற்படுவது நியதியே. அதுகுறித்து நிர்வாகங்களுக்கிடையிலேயே பேசித் தீர்க்கப்பட வேண்டும். ஆலயத்துக்கு வெளியே முரண்பாடுகள் வரக்கூடாது. ஆலயங்களுக்கென தனித்துவமான சிறப்புக்களும் புனிதமும் இருக்கின்றது. அவற்றை பாதுகாத்து பேணுகின்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடத்தே உள்ளது.
 
மேலும், கலாசார பண்புடைய சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பிலுள்ள ஆலய நிர்வாகங்கள் தமக்குள் மோதிக்கொள்ளாது சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டும். ஆலயங்களின் நிர்வாகங்கள் மக்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கி நீதி, நியாயத்துடன் செயற்பட்டால் எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாது. ஆலயங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பாதுகாக்கப்படும் என்றார்.

முன்னாள் போராளிகள் பலர் அரசிடம் சூழ்நிலைக் கைதிகளாகவுள்ளனர்! ‘தயா’ மாஸ்டர் மிகவும் நல்லவர்: அனந்தி!

27th of December 2013
தற்பொழுது ஊடகவியலாளராக இருக்கின்ற தயா மாஸ்டர் போன்ற புலிகளின் முன்னாள் போராளிகள் பலர், அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றனர் எனவும், அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது எனவும் வட மாகாண சபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார்.
 
சுனாமி கடல்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமிச் சதுக்கத்தில் இடம்பெற்ற பொழுது அங்கு தயா மாஸ்டருடன் நீண்டநேரமாக உரையாடிய பின்னர் ஊடகவியலாளருக்கு தமது சந்திப்பு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இருவரும் நீண்ட நேரம் உரையாடியமை தொடர்பாக ஊடவியலாளர்கள் திருமதி அனந்தியிடம் வினாவிய பொழுது அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் என்னுடைய கணவனான எழிலன் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து மிகவும் நெருங்கமான நண்பர்கள். நாம் திருகோணமலையில் இருந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் எமக்கு தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை.
 
அக்காலப்பகுதியில் நான் தாயாமாஸ்டரிடம் கேட்டுக்கொண்டதற்கமைய அவர் எமக்கு டெலிபோன் வசதிகளைச் செய்து தந்திருந்தார். அந்த அளவிற்கு தயாமாஸ்டர் மிகவும் நல்ல மனிதர். ஆனால், அவர் தற்பொழுது அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதியாகவுள்ளார். இவரைப் போன்ற பலர் இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழுகின்றனர். முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றார்.

Tuesday, December 24, 2013

வட மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்க ஆளுநர் இணக்கம்?

24th December 2013
வட மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல்
ஜி.ஏ.சந்திரசிறி கோரியுள்ளார்.
 
வீடமைப்பு மற்றும் போக்குவரத்து திணைக்களங்களை புதிதாக உருவாக்கும் யோசனையை வடக்கு மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்மொழிந்திருந்தார். இது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, ஊடகங்களில் தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது. இதனையடுத்து, ஆளுனருக்கும், மாகாண சபைக்கும் இடையிலான பனிப்போர் தீவிரம் பெற்றது.
 
இந்நிலையில், வடக்கு மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி கடந்தவார இறுதியில் ஒப்புதல் வழங்கியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண சபையினால் கோரப்பட்டுள்ள, போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்களங்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு நிதி அமைச்சின் கீழ் செயற்படும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
 
இரு திணைக்களங்களை உருவாக்குவதற்காகவும், இதற்கான ஆளணி அனுமதியைப் பெற்று நியமிப்பதற்கும் உதவி வழங்குமாறு அவர் கோரியுள்ளார். இதேவேளை, மாகாண சபையினால் கோரப்படும் இரு திணைக்களங்களை உருவாக்குவது தொடர்பான, அதற்கான நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண சபைக்கு ஆளுநர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையிலேயே, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து திணைக்களங்களை அல்லது அதிகார சபையை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு நிதியமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளசின் வாக்குறுதியை அடுத்து வைத்தியசாலை சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது!

24th December 2013
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் பணி புறக்கணிப்பு போராட்டம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது.
 
போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் (23) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், அங்கு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுடன் நேரில் கலந்துரையாடி, நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து கொண்டார்.
 
கடந்த 6 வருடங்களாக போதனா வைத்தியசாலையில் பரியோவான் முதலுதவிப் படை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொண்டர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி, கடந்த பத்து நாட்களாக குறித்த தொண்டர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டதன் மூலம் வைத்தியசாலை நிர்வாகத்தினரும், சிகிச்சைக்காக வரும் நோயாளர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வந்தனர்.
 
இந்நிலையில், இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக இன்றைய தினம் (23) வைத்தியசாலைக்கு சென்ற அமைச்சர் அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்களுடன் கலந்துரையாடியது மட்டுமல்லாது வைத்தியசாலை நிர்வாகத்தினதும், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினதும், சுகாதார அமைச்சினதும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுக்கு எடுத்து விளக்கினார்.
 
இதன்பிரகாரம் வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக, முதற்கட்டமாக 68 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், ஏனையோரது நியமனங்கள் தொடர்பாக ஜனவரி 2ம் தேதி அமைச்சரவையில் கலந்துரையாடி சாதகமாக பரிசீலிக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன், அதுவரையில் போராட்டத்தை கைவிட்டு வைத்தியசாலையினதும், நோயாளர்களினதும் நலன்களை கருத்தில் கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதனொரு அங்கமாக பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக தொண்டர்களுக்கு பானம் வழங்கிவைத்தார்.
 
இந்நிலையில், 168 பேருக்கு எதிர்வரும் வியாழக்கிழமை நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதுடன், ஏனையோருக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடியும், சிறப்பு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தும், அவர்களை தற்காலிகமாக பணிக்கு அமர்த்துவது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும், தற்காலிகமாக இத் தொண்டர்கள் பணியாற்றும் போது மூன்று வருட அவகாசம் வழங்கப்பட்டு அதற்குள் இவர்கள் தங்களது கல்வித்தகைமையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் அவர்கள் அங்கு தெரிவித்தார்.
 
இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி பவானி பசுபதிராஜா, வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் இரா.செல்வவடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுக்கும், அமைச்சர் அவர்கள் கருத்துரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வுமே இன்றைய தேவை. தேசிய நத்தார் விழாவில் அமைச்சர் றிஸாட்!

24th december 2013
விட்டுக்கொடுப்பும் , புரிந்துணர்வுமே இன்று தேவையாக இருப்பதாக அமைச்சர் றிஸாட்
பதியூதீன் தெரிவித்திருக்கின்றார் .
 
மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழாவில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார் .
 
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அணுசரனையுடன் மன்னார் மாவட்ட செயலகம் நடாத்திய தேசிய நத்தார் விழா நேற்று திங்கடக்கிழமை மாலை ( 23.12.203 ) மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றது .
 
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை. எஸ் . தேசப்பிரிய தலமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழாவில் மன்னார் ஆயர் இராயேப்பு ஜேசேப்பு ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க குருமார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர் .
 
இதன் போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,,,,
 
ஒவ்வொரு மதமும் , இன , மத ஒற்றுமையினைத்தான் எடுத்துக் கூறுகின்றது . விட்டுக் கொடுப்பும் , புரிந்துணர்வுமே இன்று எமக்கு தேவையாக இருக்கின்றது .
 
அதனை ஏற்படுத்திக் கொள்ள இந்த ' தேசிய நத்தார் விழா ' நிகழ்வு ஒரு சந்தரப்பமாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரவித்திருக்கின்றார் .
 
இதனிடையே நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் ஆயார் உரையாற்றுகையில் ,
 
கடவுள் அன்பை விரும்புபவர் , அன்பு செலுத்தும் இடத்தில் கடவுளை காணலாம் . அதே போல் நாம் கடவுளுக்கு அன்பு செலுத்தினால் தான் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் எனவும் தெரிவித்திருக்கின்றார் . இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் வருகையும் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார் .

சாவகச்சேரி பிரதேச செயலக பட்டதாரிகள் கவனயீர்ப்பில்!


24th december 2013
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுநர்கள் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தால் 51 ஆயிரம் பட்டதாரிகள் கடந்த ஆண்டில் பிரதேச செயலகங்களுக்கு பயிலுநராக இணங்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பட்டதாரிகளுக்கு கடந்த மாதத்திற்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளுள் சாவகச்சேரி பிரதேச செயலகம் தவிர்ந்த 14 பிரிவுகளுக்கும் கடந்த 15ம் தேதி யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அரச அதிகாரிகளாலும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நியமனங்கள் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும், கடந்த நாள்களில் தமக்கும் நியமனம் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
நியமனம் வழங்கப்படாத நிலையில், பட்டதாரிகள், இன்றைய தினம் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பிரதேச செயலக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது, பட்டதாரிகள் அனைவரும் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றையும் பிரதேச செயலரிடம் கையளித்தனர்.
தமது நியமனம் வழங்கப்படாமைக்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் எனவும், எதிர்வரும் 26ம் தேதிக்குள் நியமனம் தொடர்பான உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக பேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

12 ஆயிரம் புலிகளை சமூகத்துடன் மீண்டும் இணைத்தமை மிகப் பெரிய சாதனை:ஜீ.எல்.பீரிஸ்!

24th december 2013
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் இலங்கை, கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதில் அடைந்துள்ள சாதனைகளைப்பற்றி அரசாங்கம் இரண்டு முக்கிய விளக்கங்களை அளிக்கவுள்ளது.

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பொறுப்பாகவுள்ள ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க ஜனவரியில் ஜெனீவா சென்று பல்வேறு நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பார்.

இலங்கையிலுள்ள இராஜதந்திர நிறுவங்களின் தலைவர்களுக்கும் இது தொடர்பான விளக்கமளிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் பெரியளவில் சாதனைகள் உள்ளன. இவற்றுள் 12 ஆயிரம் புலிகளை சமூகத்துடன் மீண்டும் இணைத்தமை

அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் மன்னார் மாவட்ட மீனவர்கள்,விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்!

24th December 2013
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்
தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம் ஒன்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .
 
இதன் போது அண்மைக்காலங்களாக ஏற்பட்டு வரும் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது .
 
விவசாயம் செய்பவர்கள் மழை இல்லாததன் காரணத்தினால் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மாற்று பயிர்கள் பயிரிடுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
 
இதே வேளை அனர்த்தங்களினால் பாதீக்கப்பட்ட மீனவர்களக்கும் விவசாயிகளுக்கும் நஸ்டஈடு பாதீப்பு நிவாரணம் ஆகியவை வழங்குவதற்காண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
 
மன்னார் மாவட்டத்தில் 26 ஆயிரம் விவசாயிகளும் , 9 ஆயிரம் மீனவர்களும் பாதீப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
 
இந்த நிலையில் குறித்த அவசர கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை. எஸ் . தேசப்பிரிய , மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் உற்பட கடற்தொழில் , விவசாய திணைக்கள அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர் .

புலம்பெயர்ந்த இலங்­கை­யர்­கள் நாடு திரும்ப வேண்டும்: பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ!

24th December 2013
இலங்கைத் திரு­நாடு கடந்த காலங்­களில் எதிர்­நோக்­கி­யி­ருந்த பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு துரித மற்றும் சம­வி­கித வளர்ச்­சிக்­கான பாதையில் நிதா­னத்­து டன் பய­ணித்துவரு­வ­தனால், வெளி­நா­டுகளில் வாழ்ந்­து­வரும் அனைத்து சமூ­கங்­க­ளையும் சேர்ந்த இலங்­கை­யர்­களைத் தாய்நாட்­டிற்கு திரும்பி வரு­மாறு அர­சாங்கம் வலி­யு­றுத்­திக்கேட்­டுள்­ளது.
 
கொழும்பில் நேற்று நடை­பெற்ற இலங்­கையில் பணி­யாற்­றுங்கள் எனும் தொனிப்­பொ­ருளில் அமைந்த மாநாட்டில் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில்,
 
இலங்­கையில் வாழ்­வ­தற்கும் பணி­யாற்­று­வ­தற்­கு­மென அறி­வார்ந்த பணி­யா­ளர்கள் மற்றும் ஏனைய தொழில்சார் நிபு­ணர்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய சூழ­லொன்றை உரு­வாக்­கு­வதில் அர­சாங்கம் மிகவும் ஆர்வம் காட்­டி­வ­ரு­வ­தாகத் தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசு­கையில், கடந்த 1980 களில் தொடங்கி 2009 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் நாட்டில் தோன்­றி­யி­ருந்த நிச்­ச­ய­மற்ற சூழ்­நிலை கார­ண­மாக எமது புத்­தி­ஜீ­வி­களில் பலர் நிம்­ம­தி­யான வாழ்க்கை வச­தி­களைத் தேடி ஏனைய நாடு­க­ளுக்குச் சென்­றி­ருந்­தனர்.
 
இத்­த­கைய தனி­ந­பர்கள் யுத்த சூழ்­நி­லை­யி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்­ளவோ, உயர்­கல்­வியைப் பெற்­றுக்­கொள்­ளவோ, அதிக பண­வ­ரு­மானம் ஈட்­டித்­த­ர­வல்ல வேலை வாய்ப்பு வச­தியைப் பெற்­றுக்­கொள்­ளவோ அல்­லது சிறந்த வாழ்க்கைத் தர­மொன்றை அனு­ப­விக்­கவோ சென்­றி­ருந்­தாலும்,
அவர்­களின் புறப்­பாடு உண்­மை­யி­லேயே நாட்­டிற்குப் பார­தூ­ர­மா­னதோர் இழப்­பாகும்.
 
எமது நாடு கடந்த காலங்­களில் முகம்
கொடுத்­தி­ருந்த பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு, தற்­போது துரித சம­வி­கித வளர்ச்­சிக்­கான பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருப்­ப­தனால், தங்கள் தாய்­நாட்­டிற்குத் திரும்­பி­வ­ரு­வ­தென வெளி­நா­டு­களில் வாழ்ந்­து­வரும் அனைத்துச் சமூ­கங்­க­ளையும் சேர்ந்த இலங்­கை­யர்கள் கருத்­திற்­கொள்ள வேண்­டிய காலம் தற்­போது கனிந்­துள்­ளது.
 
கடந்த ஒரு சில தசாப்­தங்­க­ளாக கொழும்பு மாந­கரின் சேதன வளர்ச்சி கார­ண­மாக அது எதிர்­நோக்கி வந்­துள்ள பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கென அண்­மைக்­கா­ல­மாக ஏரா­ள­மான பணிகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. அர­சாங்கம் தனது நிரு­வாக செயற்­பா­டு­களை ஸ்ரீ ஜெய­வர்த்­ன­புர பிர­தே­சத்­திற்கு மாற்­றி­வ­ரு­வதால் உல­கத்­த­ரம்­வாய்ந்த பொரு­ளா­தார மைய­மொன்­றாக வளர்ச்­சி­ய­டையத் தக்க வகையில் கொழும்பு அதி­க­ள­வி­லான இட­வ­ச­தியைக் கொண்­ட­தாக விளங்­க­வுள்­ளது.
 
கால்வாய் வலை­ய­மைப்பு, வடி­கா­ல­மைப்பு மற்றும் சாக்­கடை அகற்றல் முறை­மைகள் போன்ற பாரி­ய­ளவில் உதா­சீனம் செய்­யப்­பட்­டி­ருந்த பழைய உட்­கட்­ட­மைப்பு வச­திகள் தற்­போது வளர்ச்சி கண்­டு­வ­ரு­கின்­றன. நீர் வழங்கல் மற்றும் மின்­சார விநி­யோகம் ஆகி­ய­வற்­றி­லான வினைத்­தி­றனை அதி­க­ரிக்­கவும் முன்­னேற்­ற­வு­மென திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
 
அண்­மைக்­கா­ல­மாக கணி­ச­மான அள­வி­லான கவ­னத்தை ஈர்த்­துள்ள இன்­னு­மொரு முன்­னேற்­றத்­து­றை­யாக மாந­கர திண்மக் கழி­வுப்­பொருள் முகா­மைத்­துவம் அமைந்­துள்­ளது. நீண்­ட­கால தவ­ணை­மு­றையில் இந்தப் பிரச்­சி­னையை எவ்­வாறு வெற்­றி­க­ர­மாகக் கையாள்­வ­தென்­பது குறித்து தற்­போது ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய கீதத்தை அவமரியாதை செய்தார்: விமல் வீரவன்ச!

24th December 2013
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய கீதத்தை அவமரியாதை செய்தார் என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
 
தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க முடியாத நபர்கள் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது.
 
தேசிய கீதம் இசைக்கப்பட்ட போத சிலர் நின்று கொண்டு உறங்கினார்கள்.
தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது ரணில், தனது சேர்ட்டை சரி செய்தார்.
நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பது பாடசாலைக் காலத்திலேயே எமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் தனது சேர்ட் கையை மடித்துக்
 
 

இலங்கை கத்தோலிக்க திருச்சபை தமிழ் இனவாதத்திற்கு குரல் கொடுக்கிறது: குணதாச அமரசேகர!

24th December 2013
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பிரிவினைவாத சக்திகள் நாட்டில்
இருக்கும் வரை நாடு முன்னோக்கிய செல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார் .
 
தமிழ் இனவாதத்திற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை குரல் கொடுத்து வருகிறது . மெல்கம் ரஞ்சித் போன்றவர்களும் இதற்காகவே குரல் கொடுத்து வருகின்றனர் .
 
இந்த விஷக் கிருமிகள் நாட்டில் இருக்கும் வரை ஒரு போதும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது . நாட்டில் 70 வீதத்திற்கும் மேல் சிங்கள பௌத்தர்கள் உள்ளனர் என அவர் சுட்டிகாட்டியுள்ளார் .
 
7 வீதத்திற்கும் குறைவான கத்தோலிக்கர்களை கொண்ட இவர்களுக்கு எப்படி இப்படியான அழுத்தங்களை கொடுக்க முடிந்துள்ளது .
 
இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர் எமக்கு சுதந்திரத்தை வழங்கும் போது , துஷமான நாடாளுமன்ற முறையையும் , பிரித்து வேறுப்படுத்தும் அரசியல் கட்சி முறைமையையும் விட்டுச் சென்றனர் .
 
இதன் காரணமாவே 70 வீதமான பௌத்த சிங்களவர்கள் பிரித்து வேறாக்கப்பட்டுள்ளனர் . இந்த பிரித்து வேறுப்படுத்தும் முறை காரணமாக தமிழ் இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் .

புதுக்­கு­டி­யி­ருப்பு சிவ­நகர், கோம்­பாவில் பகு­தி­களில் மிதிவெடி அபாயம்!

s243724th December 2013
காணப்படுவதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை காணப்படுகின்றது .
 
இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளான புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கோம்பாவில் , சிவநகர் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் குடியேறியுள்ள காணிகளில் பயிர்ச் செய்கைகளுக்குத் தமது காணிகளைத் துப்புரவு செய்யும் போது மிதி வெடி உள்ளதை அவதானித்துள்ளனர் .
 
சிவநகர் பகுதியில் பயிர்ச்செய்கைக் காணியை துப்புரவு செய்யும்போது அதற்குள் கொத்துக்குண்டு வடிவிலான வெடிகுண்டு ஒன்று காணப்பட்டதையடுத்து குறித்த காணியைத் துப்புரவு செய்த விவசாயி அதை நிறுத்திவிட்டு அதனுள் எந்தப் பயிர்ச் செய்கையினையும் மேற்கொள்ளமுடியாததால் கவலையடைந்துள்ளார் .
 
இதேபோன்று புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியிலுள்ள காணி ஒன்றினைத் துப்புரவு செய்யும்போது வெடிக்கும் நிலையில் அதிசக்தி வாய்ந்த இரு எறிகணைகள் காணப்பட்டதையடுத்து அக்காணியை துப்புரவு செய்த காணி உரிமையாளரும் அதனைக் கைவிட்டுவிட்டார் .
 
இவ்வாறு மீள்குடியேறிய பகுதிகளில் மிக ஆபத்தான நிலையில் மிதி வெடி காணப்படுதனால் இப்பகுதி மக்கள் பெரும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் .

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வீழ்ச்சி பாதைக்கு இட்டுச்செல்ல எவ­ராலும் முடி­யாது: மாவை சேனா­தி­ராஜா!

s242924th December 2013
இதனைத் தடுக்க யாராலும் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார் .
 
சம்மாந்துறைத் தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடனான சந்திப்பும் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாவிதன்வெளிப் பிரதேச சபைத் தவிசாளர் எஸ் . குணரெத்தினம் தலைமையில் 15 ஆம் கிராமம் பல்தேவைக்கட்டடத்தில் நடைபெற்றது .
 
அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
 
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் . செல்வராசா , பா . அரியநேத்திரன் , மாகாண சபை உறுப்பினர்களான த . கலையரசன் மற்றும் எம் . இராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர் .
 
அவர் தொடர்ந்தும் பேசுகையில் , போர் முடிவுற்றதற்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் , பாராளுமன்றத் தேர்தல் , மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றனர் . இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அரசாங்கம் எங்களிடம் இருந்து ஒரு பியசேனவை எடுத்துவிட்டது .
 
ஆறு தசாப்த காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று வருகிறது . எமது மக்கள் இராணுவத்தின் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்ட போதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே வாக்க ளித்துள்ளமை பெரும் வெற்றியாகும் . அதாவது அன்றிலிருந்து இன்று வரைக்கும் எமது மக்கள் கொள்கையுடனும் இலட்சியத்துடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் வடக்கு - கிழக்கில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் . இதனால் வடக்கில் ஆட்சி அதிகாரத்தினை நாம் பெற்று இருக்கின்றோம் . கிழக்கு மாகாணத்தில் சொற்ப வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தால் அங்கும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் .
 
இந்நிலையில் , ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தோற்கடிக்கவோ அல்லது வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவோ யாராலும் முடியாது . எமது மக்கள் பலமாகவே உள்ளனர் . குறிப்பாக வட மாகாணத் தேர்தலில் அரசாங்கம் தங்களுடைய பலத்தினை முற்றாகப் பிரயோகித்த போதும் என்றும் இல்லாதவாறு பெண்களும் இளைஞர்களும் முன்னின்று செயற்பட்டு கூட்டமைப்பின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர் .
 
கடந்த யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான மக்கள் பலியாகிய பேரழிவுக்குப் பின்னர் பிரதேச சபைகளின் வரவு - செலவு திட்டப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது . இன்று சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தெரிவாகியதற்குப் பின்னர் சபையினை திறன்பட நடத்துவதற்கு மாறாக , மக்களின் நன்மைக்கான வரவு - செலவுத்திட்டங்களை தோற்கடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதை அறியமுடிகின்றது . குறிப்பாக நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக இருந்த ஏ . ஆனந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விதி முறைகளுக்கு அப்பால் செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் அறிக்கை கிடைத்துள்ளது . இன்று உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டால் அதன் தலைவர் 14 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் . இன்று நாட்டிலே அரசாங்கத்தின் ஆளுகையில் இருக்கின்ற 16 பிரதேச சபைகளின் வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கும் அல்லது விதிமுறைகளுக்கு அப்பால் சென்று வரவு - செலவுத்திட்டத்தினை தோற்கடிக்க உதவினாலோ அல்லது அதற்கான சதிகளை மேற்கொண்டாலோ கட்சியில் இருந்து நீக்கப்படுவர் . அவ்வாறு ஒருவர் நீக்கப்பட்டால் அவருடைய பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவே கருதப்படுவர் . இந்நிலையினை அறிந்து ஆனந்தன் செயற்பட வேண்டும் . யாராக இருந்தாலும் கட்சிக்கும் தனக்கும் வாக்களித்த மக்களுக்கும் விசுவாசம் உடையவர்களாக இருக்க வேண்டும் . இதனை விடுத்து கட்சிக்கு எதிரான துரோகங்களைச் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் .

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கை: ரத்நாயக்க!

24th December 2013
வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
 
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 02 தடவைகள் தோற்கடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்
ஆர்.எம்.எ.எல்.ரத்நாயக்க கூறுகின்றார்.
 
அதன்பிரகாரம் மீரிகம, பேலியகொடை மற்றும் கெஸ்பேவ ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தலைவர்களின் பெயர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரினால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.
 
இதுவரையில் கூட்டமைப்பின் அதிகாரத்திற்குட்பட்ட 9 உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் புதிய பிரதானிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஏ.கே. 47 ரக துப்பாக்கியை உருவாக்கிய ரஷ்யர் கலாஷ்னிகோவ் 94 வயதில் மரணம்!

24th December 2013
ஏ.கே. 47 என்ற ஆட்டோமேடிக் ரக துப்பாக்கியை வடிவமைத்த ரஷ்யாவின் லெப்டினண்ட் ஜெனரலாக இருந்த மிகைல் கலாஷ்னிகோவ் (94) நேற்று மரணமடைந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 1946-1948 ம் ஆண்டுவரை மிகக் கடுமையாக உழைத்து இந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியை அவர் வடிவமைத்தார்.

பின்னர், 1949 ஆண்டு இந்த துப்பாக்கியானது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இன்று உலகம் முழுவதிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் எனது கண்டுபிடிப்பை சமூக விரோத சக்திகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது, எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று ஒரு பேட்டியில் மிகைல் கூறியிருந்தார். 

பல்வேறு விருதுகளை பெற்ற அவர், ரத்தக்கசிவு நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது சொந்த ஊரான மாஸ்கோ அருகே உள்ள இஸெவ்ஸ்க் என்னுமிடத்தில் காலமானார். இவர் ஏ.கே. 47 மட்டுமில்லாமல், ஏ.கே. 74 என்ற மற்றொரு ரக துப்பாக்கியையும் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

பேஸ்புக் குற்றங்கள் தொடர்பில் 1,200 முறைப்பாடுகள்!

24th December 2013
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக வலைத்தளமான பேஸ்புக் குற்றங்கள் தொடர்பில் 1,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
 
அதிகளவிலான முறைப்பாடுகள் பேஸ்புக் போலி கணக்குகள் தொடர்பில் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த குறிப்பிட்டார்.
 
அவ்வாறான கணக்குகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
சில கணக்குகளை பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவித்ததன் பின்னர், நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்தார்.
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரையும் பேஸ்புக்கில் நண்பர்களாக இணைத்துக்கொள்வதே சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

யாழ். கோப்பாயில் விசா விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு இந்திய பிரஜைகள் கைது!

24th December 2013
யாழ். கோப்பாயில் விசா விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவ்விரு இந்திய பிரஜைகளும் நேற்று  மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்களிடம் இருந்து சாரி உள்ளிட்ட விற்பனை பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை இலங்கைக்கு கொண்டு வந்த  இருவர் கைது!
 
சட்டவிரோதமாக ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தை இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்து இன்று  அதிகாலை 4 மணியளவில் இலங்கை வந்த இரு வெளிநாட்டு பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 20 அமெரிக்க டொலர் தாள்கள் 40, 50 அமெரிக்க டொலர் தாள்கள் 40, 50 சுவிஸ் பிரேங்க் தாள்கள் 12 இலங்கை சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த வெளிநாட்டு நாணயங்களின் இலங்கை பெறுமதி 4 லட்சம் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளைத் தாள்கள் போன்று காட்சியளித்த இவற்றை இரசாயன பதார்த்தம் கொண்டு சுத்தம் செய்த போது அவை வெளிநாட்டு நாணயம் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஆப்பிரிக்க பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினை மோசமடைய ஜெயலலிதா காரணம்: ராஜித்த சேனாரத்ன!

24th December 2013
இலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினை மோசமடைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மைய காலங்களில் முன்னெடுத்திருந்த சில தீர்மானங்கள் தான் காரணம் என்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய மீனவர்கள் உற்சாகமடைந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்த ஆண்டில் மட்டும், இலங்கைக் கடற்படையின் கண்காணிப்பின்படி, 43 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்திருக்கின்றன.

'தமிழக முதல்வர் ஜெயலலிதான் இந்தப் பிரச்சனைக்கு கடந்த காலங்களில் அடித்தளமிட்டார். அவர் எடுத்திருந்த சில தீரமானங்கள் காரணமாகத்தான் இந்தப் பிரச்சனை மோசமடைந்திருக்கிறது. இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க போகவேண்டாம், அது சட்டவிரோத நடவடிக்கை என்று நாங்கள் எங்கள் மீனவர்களுக்கு கூறியிருக்கிறோம். ஆனால் அப்படியான அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து வந்திருக்கவில்லை.

'தமிழக முதல்வர் ஒரு பக்கத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுகிறார். ஆனால் மற்ற பக்கத்தில் அவர்களின் மனித உரிமைகளை மீறுவோருக்காகவும் அவர் குரல்கொடுக்கிறார். அதனால் தான் அந்த மீனவர்கள் இலங்கை கடல்பரப்புக்குள் வருவதற்கு உற்சாகம் பெறுகின்றனர்.
 
'இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார்

தமிழக முதல்வர் அழைப்பு விடுத்தால், மீனவர் பிரச்சனை தொடர்பில் தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்-வாரத்தில் இந்தியா செல்லவுள்ளார்.

'ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் அத்துமீறி வடக்கு இலங்கைக் கடல்பரப்புக்குள் நுழைகின்றமை பற்றியும் தங்கள் நாட்டு மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்படுகின்றமை தொடர்பிலும்' தனது பயணத்தின்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் இருநாட்டு அரசுகளும் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

இறுதியாக, 2008ஆம் ஆண்டில் கூட்டு செயற்குழு அமைக்க எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, 2012ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கை நடத்திய கூட்டுச் சந்திப்பின் பின்னர் இந்தியா தனது கூட்டத்தை இதுவரை நடத்தவில்லை என்றும் ராஜித்த சேனாரத்ன கூறினார்.

இலங்கை மீனவர்களும் 220 பேர்வரையில், பெரும்பாலும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள், இந்தியச் சிறைகளில் இருப்பதாக இலங்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பதிகாரி அன்டணி ஜேசுதாசன் பிபிசியிடம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, December 23, 2013

அர­சாங்­கத்தின் உட்­கட்­ட­மைப்பு பணிகள் சமூகம் சார்ந்­த­தாக அமையப் பெற­வில்லை: சுமந்திரன்!

s2323
23rd of December 2013
மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டுக்கானதாக அமையப் பெறுதல் வேண்டும் . எனினும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பன சமூககத்தின் தேவைகளை சார்ந்தவையாக அமைந்திருக்க வில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .
 
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
 
நிதி திட்டமிடல் அமைச்சு மீதான மேற்படி விவாதத்தில் சுமந்திரன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில் ,
 
அரசாங்கத்தின் வருமதி உணரப்பட்டாலும் கூட நாட்டு மக்களின் வருமானத்தில் எந்த பெறுபேறுகளையும் காண முடியாதிருக்கின்றது . வாழ்க்கை செலவு அதிகரித்துச் செல்கின்றது . இதனை நோக்குகையில் அரச வருமானமானது வீழ்ச்சியடைந்து செல்கின்றது என்றே கூற வேண்டும் .
 
வருமானம் குறையும் போது செலவினமும் குறைவது தான் இயல்பாகும் . எனினும் செலவினம் இங்கு குறைக்கப்படுகின்றது அல்லது குறைகின்றதா என்பதே இங்குள்ள பிரச்சினையாகும் .
 
கடந்த வரவு - செலவுத்திட்டத்தின் போது கல்வித்துறைக்கென மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது . எனினும் இம்முறையும் கூட கல்வித்துறைக்கான செலவினம் குறைக்கப்பட்டுள்ளது . அது மாத்திரமன்றி சுகாதாரத்துறைக்கும் கூட நிதி ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது .
 
மேற்படி துறைகளுக்கான செலவினங்களானது மத்திய அரசாங்கத்தில் மாத்திரமின்றி மாகாண அரசுகளிலும் குறைக்கப்பட்டுள்ளதை இங்கு கூற வேண்டும் .
 
இது இவ்வாறிருக்க , வடக்கு - கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் வரவேற்கப்படக்கூடியவை என்றாலும் அத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கை நிலை உயர்ச்சிக்கு எவ்வாறான பங்களிப்பினை வழங்குகின்றன என்பதே கேள்வியாகும் .
 
உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து இங்கு எதுவும் கூறப்படவில்லை . எனினும் இதில் மக்களின் வாழ்க்கை நிலை மேம்படுத்தலே பிரதானமாகும் .
 
கல்வி - சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் . இவ்வாறு நோக்கும் போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உட்கட்டமைப்பு பணிகள் சமூக மேம்பாடு சார்ந்தவையாக இருக்கவில்லை . இந்நிலை மாற்றியமைக்கப்படவேண்டும் என்றார் .

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவை பேசியும் பயனில்லை: நாவிதன்வெளி வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

மாவை பேசியும் பயனில்லை: நாவிதன்வெளி வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு23rd of December 2013
கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அம்பாரை நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலுவுத திட்டம் அக் கட்சியின் உப தவிசாளரின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயலாள் மாவை சேனாதிராஜா நேற்று  நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலுவுத் திட்டம் தோற்கடிக்கப்படக் கூடாது என இணக்கப்பாட்டுக்கு கொண்டுவந்தபோதும் அது பயனளிக்கவில்லை.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் சி.குணரத்தினம் தலைமையில் இன்று (23) வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது.

இதன் பின்னர் வாக்கெடுப்பில் தவிசாளர் உட்பட மூன்று பேர் வாக்களித்ததுடன் எதிர்கடசியின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சுதரந்திரக் கட்சி உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் உப தவிசாளர் அமரதாஸ ஆனந்தனின் ஆதரவுடன் 4 பேர் வாக்களித்து தோற்கடித்துள்ளனர்.

இதேவேளை கடந்த 17 ம் திகதி வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்த போதும் அது அன்றையதினம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் உப தவிசாள் அரதாஸ ஆனந்தனை கடந்த நவம்பர் மாதம் 22 ம் திகதி தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                    

 
 

குடி­சன மதிப்­பீட்­டின்­படி 697,406 குடும்­பங்­க­ளுக்கும் வீடுகள் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். விமல் வீர­வன்ச!

s232523rd of December 2013
குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது . இந்நிலையில் , கொழும்பில் சேரிப்புறங்களில் வாழ்கின்ற 65000 குடும்பங்களில் 20000 குடும்பங்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் . அத்துடன் மலையகத்தில் 23 வீட்டுத்திட்டங்களுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மாணப் பொறியியல் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார் .
 
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் .
 
அமைச்சர் விமல் வீரவன்ச இங்கு மேலும் கூறுகையில் , எனது அமைச்சின் மீதான விவாதம் தொடர்பாக சார்பாகவும் எதிராகவும் இச்சபையில் கருத்து தெரிவித்த அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள் . மத்தேகொடவில் வீடமைப்புக்களுக்கான தெரிவுகள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டே வீடுகள் வழங்கப்படவுள்ளது . அரச கணக்காய்வுத் திணைக்களமே மேற்கொள்ளப்பட்டது .
 
சபையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரேமதாசாவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பேசினார்கள் .
 
அவரது வீட்டுத் திட்டங்களில் 1978-1983 வரை காலத்தில் ஒரு இலட்சம் வீடுகள் 1990 - 1994 வரை 10 இலட்சம் வீடுகள் , 1984-1989 வரை 15 இலட்சம் வீட்டுத் திட்டங்களை பிரேமதாசவின் வீட்டுத் திட்டங்களாகும் . ஆனால் இது நிறைவேறியதா இல்லை இக்கால கட்டத்தில் 7 இலட்சத்து 10,000 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டன .
 
அதேவேளை இந்த எண்ணிக்கையில் வீடுகள் அமைக்கப்பட்டதை மட்டும் உள்ளடக்கப்படவில்லை . ஜன்னல் வழங்கியதும் மலசலகூடத்திற்கு உபகரணங்கள் வழங்கியதும் வீடுகள் அமைக்கப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது .
 
இன்றைய குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் 6 இலட்சத்து 97 ஆயிரத்து 406 பேருக்கு வீடுகள் தேவைப்படுகின்றது . அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களின் காரணமாகவே வீடுகள் தேவைப்படும் மக்களின் தொகை குறைந்தது .
 
2010 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை 79.681 வீடுகளும் புனரமைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
 
இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் நகரில் வாழும் மக்களுக்கான திட்டங்கள் தொடர்பில் மிக வேகமான திட்டங்களை முன்னெடுத்தோம் . ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இந்த முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது .
 
யக்கல , அந்தான , கண்டி , கலகெதர பிரதேசம் போன்ற பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . மீனவ குடும்பங்களுக்காக , மொறட்டுவ லுனாவ பிரதேசத்தில் 3000 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன . இவ் வீடுகள் ஜனவரி மாதமளவில் மீனவ குடும்பங்களுக்கு கையளிக்கப்படும் . தெற்காசியாவிலேயே குறைந்த மிகக் குறைந்த குடிசைகள் உள்ள நாடு இலங்கை . குறைபாடுகளுடன் வாழ்ந்த மக்களுக்கு இன்று அடிப்படை வசதிகளுடன் வீடுகளை வழங்கியுள்ளோம் .
 
இன்று கிராமங்களிலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து வரும் மக்களின் தொகை நூற்றுக்கு 14.3 வீதம் குறைந்துள்ளது .
 
கிராமத்தவர்களின் கொழும்பு வருகையினாலேயே சேரிகள் அதிகரித்தன . இது இன்று குறைந்து விட்டது . எப்படி இது நடந்தது ? அபிவிருத்திகளை கிராமத்திற்கு கொண்டு சென்றதனாலேயே இது இடம்பெற்றது .
 
கொழும்பில் இன்று 65000 க்கு மேல் குடும்பங்கள் குடிசைகளிலும் தோட்டங்களில் நெருக்கடியாக வாழ்கின்றன .
 
இவ்வாறான வாழ்க்கை முறை காரணமாகவே சமூக விரோத செயல்களில் போதைவஸ்துக்கள் மதுபாவனை என்ற பழக்கங்களுடனான மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர் . இதனை மாற்றியமைத்து மக்களுக்கான புதுயுகத்தை உருவாக்குவோம் அதற்காகவே தொடர் மாடித் திட்டங்களை நிர்மாணித்து வருகின்றோம் .
 
2015 ஆம் ஆண்டளவில் 65000 பேரின் 20000 குடும்பங்களுக்கு தொடர் மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நிலைமையை உருவாக்குவோம் . கடந்த 3 வருடங்களில் அரச ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் அரச வங்கிகளிலிருந்து 15 பில்லியன் வீடுகளை அமைக்க கடன்கள் வழங்கப்பட்டது . மறக்கப்பட்ட மலையக மக்களுக்கான பல திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த வரவு - செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது .
 
தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக தோட்ட கம்பனிகளை வங்கிகளில் பிணையாளிகளாக்கி கடன்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் . இதற்கு நாமும் பங்களிப்பு செய்கிறோம் .
 
யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் அழி்க்கப்பட்ட குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது . ஜனவரி மாதம் மக்களுக்கு கையளிக்கப்படும் .
 
30 , 40 வருடங்களாக கவனிக்கப்படாது மரங்கள் வளர்ந்து அசுத்த நீர் வழிந்தோடிய தொடர் மாடித்திட்டம் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன . வர்ணம் மட்டும் பூசவில்லை . குறைபாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது . மாளிகாவத்தை , புதுக்கடை , வாழைத்தோட்டம என தொடர்மாடி வீடமைப்பு திட்டங்கள் உட்பட பல இவ்வாறு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன . இப் பகுதி மக்கள் மீண்டும் தமது வீடுகள் உயிர் பெற்றுள்ளதாக கூறுகின்றனர் .
 
இந்நடவடிக்கைகளின் போது தமிழ் மக்கள் , முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள் என பார்க்கவில்லை . சிங்கள மக்கள் மட்டும் வாழ்கிறார்களா என்ற இனவாதம் பார்க்க வில்லை . தேர்தல்களில் எமக்கு வாக்களிக்கவில்லை என்ற கோணத்தில் பார்க்கவில்லை என்றார் .

விலை அதி­க­ரிப்பை குற்­றஞ்­சாட்டும் எதிர்க்­கட்சி வரு­மான அதி­க­ரிப்பு பற்றி பேசவே இல்லை. பிர­தமர் டி.எம். ஜய­ரத்ன!

s232623rd of December 2013
ஆனால் மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது . அது தொடர்பில் எதிர்க்கட்சியினர் பேசுவதில்லை என சபையில் தெரிவித்த பிரதமர் டி . எம் . ஜயரத்ன இலங்கை வரலாற்றில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டங்களில் சிறப்பான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ முன் வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார் .
 
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி திட்டமிடல் அமைச்சின் மீதான வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார் .
 
சபையில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , சில்லறை விடயங்களை முதன்மைப்படுத்தி வரவு - செலவுத்திட்டம் தயாரிக்கப்படவில்லை . எதிர்கால சந்ததியினர் மற்றும் நாட்டின் அபிவிருத்திகளை கருத்தில் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது .
 
பொது நலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்பட்ட பின்னர் எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை கண்டு வியப்படைந்துள்ளனர் .
 
வரவு - செலவு திட்டத்தில் சிறு சிறு விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்காது எதிர்காலத்தில் மக்களின் சுபீட்சத்தை முதன்மைப்படுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது .
 
பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் . ஆனால் , மக்களின் வருமானங்கள் அதிகரித்திருப்பது தொடர்பில் பேசுவதில்லை என்று பிரதமர் தெரிவித்தார் .

பொரு­ளா­தார வளர்ச்­சி­வீதம் தொடர்­பான அனு­ர­கு­மா­ரவின் குற்­றச்­சாட்டு ஏற்க முடி­யா­தது.அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

s232723rd of December 2013
தரவுகளை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பதாக ஜனாநாயக தேசியக் கூட்டணியின் அனுரகுமார திசாநாயக்க எம்.பி. யினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா , அவரது கூற்றுக்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாரில்லை என்றும் கூறினார் .
 
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற 2014 ஆம் ஆண்டுக்காள வரவு - செலவுத்திட்டத்தின் இறுதி நாள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
 
நிதி திட்டமிடல் அமைச்சு மீதான விவாதத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறுகையில் ,
 
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய நிறுவனங்களில் இருந்து அரசாங்கம் கடனைப் பெறுகின்ற போது எடுத்த எடுப்பிலேயே அது கிடைக்கப் பெற்று விடுவதில்லை . மற்றும் நாம் வழங்கும் தகவல்களை ஆராயாது செயற்படுவதற்கு அந்த நிறுவனங்கள் ஒன்றும் குழந்தைத் தனம் படைத்தவை அல்ல . இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்பில் எம்மால் வழங்கப்படுகின்ற தகவல்கள் மேற்படி நிதி நிறுவனங்களால் நன்கு ஆராயப்பட்டு பகுப்பாய்வுக்கும் உட்படுத்தப்படுகின்றது . அது மாத்திரமன்றி இலங்கை நிலைமை குறித்தும் ஆராயப்படுகின்றது . இவ்வாறான பின்னணியின் அடிப்படையிலேயே கடன்கள் வழங்கப்படுகின்றன .
 
எனவே , பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்பில் அதிகாரிகளைப் பயன்படுத்தி தகவல்கள் பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அனுரகுமார திசாநாயக்க எம்.பி. யினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை நாம் மறுக்கின்றோம் .
 
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளதான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் புள்ளி விபரத்துடன் எமது அதிகாரிகள் கணிப்பீடு செய்துள்ள புள்ளிவிபரத் தகவல்கள் ஒத்துப் போயுள்ளன .
 
எனவே , அனுர குமார எம்.பி. யினால் முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களானது அவருக்கு யாரோ ஒருவரால் வழங்கப்பட்ட தவறான தகவலாகும் என்றார் .

யாழ். மாநகர சபை தொண்டர்களுக்கு சேவைக்கால அடிப்படையில் நியமனம். யோகேஸ்வரி பற்குணராசா!

23rd of December 2013
யாழ் . மாநகர சபையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு சேவைக் கால அடிப்படையில்
கல்வித் தகைமையின் இறுக்கம் தளர்த்தப்பட்டு நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கப்படுவார்கள் என மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று தெரிவித்துள்ளார் .
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 
" யாழ் . மாநகர சபையில் 150 பணியாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இன்று திங்கட்கிழமை நேர்முகத்தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன . இதற்காக பத்திரிகைகளில் மாநகர சபையினால் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சை சித்தி பெற்றவர்கள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .
 
இந்நிலையில் ஏற்கனவே யாழ் . மாநகர சபையில் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்திய மாநகர சபையின் தற்காலிக சுகாதாரத் தொண்டர்கள் தாங்களுக்கு இல்லாமல் வெளிநபருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கருதி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
 
இருந்தும் மாகாண ஆளுநரின் அதிகாரத்தின் மூலம் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் எதிர்பார்த்த கல்வித் தகைமையினை விட குறைந்த கல்வித்தகைமை உடையவர்களையும் உள்வாங்குவதாக தீர்மானித்திருந்தோம் .
 
ஆகவே இது தொடர்பாக அறிந்திராத சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர் . எனினும் அவர்களுக்கு சேவைக் கால அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என யாழ் . மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவினால் இதன் விளக்கமளிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது " என்றார் .
 
எனினும் சுகாதாரத் தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று ( 23 ) நடைபெறவிருந்த போதும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் பிறிதொரு நாளில் நேர்முகத் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது .

வரவுசெலவுத்திட்டத் தோல்விகளும் ஒத்திவைப்புக்களும்- புதியதெிரிவுகளும்!

23rd of December 2013
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இதனால் உள்ளுராட்சி மன்றங்களின் வரவு-செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டாலும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பதவி விலக தேவையில்லை என்றும் அவர்கள் தொடர்ச்சியாக குறித்த பதவியில் இருக்க கூடிய வகையிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள மதவாச்சி , ராஜாங்கன , உடுதும்பர , ஹங்குராங்கெத்த , ஜா-எல , தொம்பே மற்றும் பென்தொட்ட ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

புளத்சிங்கள, தமன பிரதேச சபைகளும் தோல்வி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற புளத்சிங்கள மற்றும் தமன ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான வரவு-செலவுத்திட்டங்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

புளத்சிங்கள பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம்  10 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த தலைவர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எட்டுபேரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவரும் எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, தமன பிரதேசபையின் வரவு-செலவுத்திட்டம் நான்கு வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த தலைவர் மட்டுமே திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த இருவர் வாக்களிப்பதிலிருந்து விலகிநின்றனர்.

வாக்களிக்காத ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் சுஜீவ விஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை தலைவரிடம் கையளித்தார்.
 
வரவு - செலவுத் திட்டம் தோற்ற உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்-.
 
2014ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்த மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தலைவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 
இதன்படி புதிய தலைவர்களது பெயர்கள் தேர்தல்கள் திணைக்களத்துக்கு இன்று (23.12.13) வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 
வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். 
இதேவேளை வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் தமது செயற்பாடு குறித்து விளக்கமளிக்குமாறு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கல்முனை மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டம் ஒத்திவைப்பு:
 
கல்முனை மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
 
கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை (23.12.13) பி.பி 2.30 மணிக்கு மேயர் நிசாம் காரியப்பாரினால் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
இந்த நிலையிலேயே மாநகர சபையின் கூட்டம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மேயர் நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.
கல்முனை மேயராக நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்ட பின்னர் சமர்ப்பிக்கப்படவுள்ள முதலாவது வரவு-செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்த்தக்கதாகும்.
 
இதேவேளை, கல்முனை மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளின் வரவு-செலவுத் திட்டங்களிற்கு எதிராக குறித்த பிரதேச சபைகளிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதற்கிடையில், கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் மற்றும் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கும் இடையிலான இழுபறி தொடர்ந்து காணப்படுகின்றது. கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.12.13) இரவு இடம்பெற்றுள்ளது.
 
இந்த கூட்டத்தில் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட நான்கு உறுப்பினர்களின்  கலந்துகொள்ளவில்லை. இவர்கள் இந்த வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டதை அடுத்தே, வரவு-செலவுத் திட்டம் பிரிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறான நிலையில் மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி அக்கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கு குறுந்தகவல் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஹோமாகம பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வி
 
ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழிருக்கின்ற
ஹோமாகம பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இரண்டு வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சுனில் பெரும்புலி வாக்களிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திய கூட்டமைப்பின் எண்மரும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.
இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த சபைக்கான வரவு-செலவுத்திட்டம் தோல்வியடைந்தது. எனினும் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்த வாக்கெடுப்பு இரத்து செய்யப்பட்டது. 
 
நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
பிரதேச சபை தவிசாளர் தலைவர் எஸ்.குணரட்னத்தினால் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
 
இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக நான்கு பேரும் ஆதரவாக மூன்று பேரும் வாக்களித்தனர். இதனால் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஒரு  வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் நான்கு உறுப்பினர்கள் இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். 
 
எனினும், பிரதேச சபை தவிசாளர் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...