Saturday, December 21, 2013

வவுனியாவை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் முஸ்லிமாக மாற்றம்!!

22nd of December 2013
வவுனியாவை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் முஸ்லிமாக இன்று மாறி உள்ளார்.
 
இவர் வெள்ளி ஜாமிஉத் தஃவ்ஹீத் பள்ளி வாசலில் ஜும்மாவுக்கு பிற்பாடு புனித இஸ்லாத்தை தழுவினார் என்று சொல்லப்படுகின்றது.
 
இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களால் தூண்டப்பட்டு இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களை நன்கு படித்தார் என்றும் இவரது தாய் முன்பு மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து இருந்த நிலையில் இஸ்லாத்தை மிகவும் உணர்ந்த நிலையில் குடும்பத்துடன் இவ்விளைஞன் சமயம் மாற விரும்பினார் என்றும் ஆனால் இளைஞனின் தகப்பன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிகின்றது.,இளைஞனின் பெயர் ரமேஸ். தற்போது ரமீஸ் ஆகி விட்டார்.

இலங்கைக்கு எதிராக சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்த போர்க்குற்ற காணொளி ஆதாரங்கள் போலியானவை: பிரதிபா மஹநாமஹேவா!

21st of December 2013
இலங்கையில், பயங்கரவாதத்தை தோற்டித்து வெற்றி பெற்று ஜனநாயகத்தை போற்றும் இலங்கை போன்ற நாட்டுக்கு எதிராக மனித உரிமை மீறல் சம்பந்தமாக யோசனைகளை கொண்டு வருவது கேலிக்குரியது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் மூன்று நிபந்தனைகள் உள்ளன.
 
அதில் முக்கியமான நிபந்தனை இலங்கை நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையான அமுல்படுத்துவது.
இதுவரை அந்த பரிந்துரைகளில் பெரும்பாலான பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்தியுள்ளது. ஏனைய பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
 
இலங்கைக்கு எதிராக சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்த காணொளி குறித்தும் விசாரணை நடத்துமாறு கூறப்பட்டது.
 
இது குறித்து மொறட்டுவ பல்லைக்கழகத்தின் நிபுணர்கள் பல கோணங்களில் ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் அந்த காணொளிகள் போலியானவை என்ற முடிவுக்கு வந்தனர்.
 
இதன் பின்னர் சனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றங்களை சுமத்தி மற்றுமொரு காணொளியை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்த முயற்சித்தது. கெலும் மக்ரே இந்தியாவுக்கு வரவும் இடமளிக்கப்படவில்லை. எனினும் அந்த காணொளி மற்றுமொரு பொய்.
 
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு மக்ரே உட்பட சனல் 4 தொலைக்காட்சியின் குழுவினர் நாட்டுக்குள் வந்தனர். அவர்கள் மேலும் ஒரு காணொளியை தயாரித்து அடுத்த மார்ச் மாதம் மனித உரிமை ஆணைக்குழுவை இலக்கு வைத்து திரையிட முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

இலங்கை மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்க மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய பாகிஸ்தான் சபாநாயகர்!

21st of December 2013
இலங்கை அதன் மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்க மேற்கொண்ட முயற்சிகளை பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் ஆயாஸ் சாதிக் பாராட்டியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் சபாநாயகர் மரியாதை நிமித்தமாக கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த போதே இதனை கூறினார்.
 
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் அனைத்து நிலைகளிலும் வெளிப்படையான வரலாற்று ரீதியான பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய ஆழமான நட்புறவு இருந்து வருகிறது.
 
பாகிஸ்தான் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாடுகளுக்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடித்தமை தொடர்பில் இலங்கையை பாராட்ட வேண்டும் என்றார்.
 
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் உதவிகளையும் ஆதரவுவை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சித் தாவும் பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள்!

21st of December 2013
எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கட்சி விட்டு கட்சித் தாவி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 5 மாகாண சபை உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கட்சி தாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிட உள்ளனர். அதேவேளை பிரதான கட்சிகளின் தொகுதி அமைப்பாளர்களும் கட்சி தாவ தாயராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் உறவினர்கள் பலர் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இவர்களில் அதிகளவான வேட்பாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளனர். அந்த மாவட்டத்தை சேர்ந்த நான்கு அமைச்சர்களின் சகோதரர்கள், ஒரு அமைச்சரின் மகன் என 5 உறவினர்கள் போட்டியிட உள்ளனர்.
 
அமைச்சர்களின் உறவினர்கள் சிலர் ஏற்கனவே இந்த மாகாண சபையில் அங்கம் வகித்து வருகின்றனர். இவர்களும் இம்முறையும் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி!

21st of December 2013
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
 
டுபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் 285 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்
கை49 .4 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
 
குமார் சங்கக்கார அணி சார்பில் அதிக பட் ஓட்டங்களாக 58 ஓட்டங்களை பெற்றார்.
 
இதன்போது அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்களை கடந்த முதலாவது விக்கட் காப்பாளராகவும் , இரண்டாவது இலங்கையராகவும்  , உலகளாவிய ரீதியில் இந்த இலக்கை எட்டிய 4 ஆவது வீரராகவும் சாதனை ஏட்டில் பதிவானார்.
 
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஜூனைட் கான் 3 விக்கட்டுக்களையும் , சஹீட் அப்ரிடி 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஒவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 284 ஓட்டங்களை பெற்றது.
 
அஹமட் ஷெஹ்சாட் 124 ஓட்டங்களை பெற்றார்.5 போட்டிகளை இந்த தொடரில் இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையிலுள்ளது.

 

வட பகுதியில் ஆயுள் காப்புறுதி இல்லாதவர்களுக்கு மீன்பிடி அனுமதி பத்திரம் கிடையாது!

21st of December 2013
வட பகுதியில் ஆயுள் காப்புறுதி பெற்றுக் கொள்ளாத மீனவர்கள் மற்றும் காப்புறுதி பொறாத படகுகளை வைத்திருக்கும் மீனவர்களுக்கு, மீன்பிடி அனுமதி பத்திரம்  வழங்கப்படமாட்டாது என யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் என யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவித்தார்.
 
சீரற்ற வானிலையின் போது ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதும்,சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
 
மீன்பிடிக்கான அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புரைக்கு அமையவே இந்த அலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாம் தார்­மீ­கப்­பொ­றுப்பு ஏற்று கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­யுள்ளோம்:கம­லேந்­திரன் விவ­காரம் தொடர்பில் டக்ளஸ் விளக்கம்!

21st of December 2013
நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது
 
செய்யப்பட்டுள்ள கமலேந்திரன் தொடர்பில் நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் . அந்தச் சம்பவத்துக்கு நாம் தார்மீகப் பொறுப்பு எடுத்துள்ளதுடன் அவரை கட்சியிலிருந்தும் விலக்கியுள்ளோம் . தனிப்பட்ட பிரச்சினை என்றாலும் அதற்கான தார்மீகப் பொறுப்பை நாம் ஏற்றிருக்கின்றோம் என்று ஈ.பி.டி.பி. யின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் .
 
இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,
 
இந்த விவகாரம் நீதிமன்றில் தற்போது உள்ளது . இக்கொலையுடன் தனக்கு சம்பந்தம் இல்லை என்று அவர் கூற முனைகின்றார் . எதுவானாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் . அதுவரை நாம் சகல பொறுப்புக்களிலிருந்தும் அவரை நிறுத்தியுள்ளோம் என்று கூறினார் .
 

கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர் உட்பட நால்வர் கைது!

21st of December 2013
சுமார் 45 லட்சம் பணம் மற்றும் பொருட் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்தறை வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் முன்னாள் இராணுவத்தினர் இருவரும் அடங்குவர்.

கொள்ளைக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் களுத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி கட்சியை அழிக்கும் வகையில் ஜனாதிபதி: ரணில் விக்கிரமசிங்க!

21st of December 2013
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி கட்சியை அழிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் இன்று  இடம்பெற்ற கட்சியின் வருடாந்த மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலத்தை விட தற்போதே பெரும் கஷ்டத்துக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

நூற்றுக்கு ஒரு வீதமானவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். ஏனையவர்கள் துன்பத்தில் உள்ளனர். அவர்களை அதிவேகமான ஓடிவருமாறு ராஜபக்ஷ அரசாங்கம் கூறுவதாக ரணில் தெரிவித்தார்.

சந்திரிக்கா ஆட்சி செய்த காலத்தை விட தற்போது கடன் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை பிற நாடுகளிடம் பெருமளவு கடன் பெற்றுள்ளதாகவும் ரணில் சுட்டிக் காட்டினார்.

இன்னும் 3 வருடத்தில் கெசினோ 3 இருப்பதாக மஹிந்த தெரிவிப்பார் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை விரும்புவதாகவும் ரணில் மேலும் கூறினார். 
 

காணாமல்போனோர் தொடர்பில் 11,000 முறைப்பாடுகள்!

21st of December 2013
காணாமல்போனோர் தொடர்பான சுமார் 11,000 முறைபாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக  முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இவற்றுள் சுமார் ஆறாயிரம் முறைபாடுகள் பொது மக்களிடம் இருந்தும், மேலும் 5000 முறைபாடுகள் முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களிடம் இருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எச்.டபிள்யூ. குணசேன குறிப்பிட்டார்.
 
1990 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகள் இந்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்றது.
 
குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களிலும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை நாட்டின் எந்தவொரு பகுதியில் உள்ளவரும் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
ஆணைக்குழுவிற்கு முறைபாடுகளை தெரிவிப்பதற்காக இந்த மாதம் 31 ஆம் திகதிவரை பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
ஆயினும், கிடைக்கப்பெறுகின்ற முறைபாடுகளை கவனத்திற்கொண்டு ஆணைக்குழுவின் கால எல்லையை மேலும் ஆறு மாதத்தால் நீடிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்க முடியும் என காணாமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள். பேசுவோம் வாருங்கள் கூட்டமைப்பிற்கு அழைப்பு!

21st of December 2013
இலங்கையின் பிரச்சனைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக , வெளிநாடுகளுக்கும்
முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் .
 
2014 - ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்தார் .
 
இலங்கையை எண்ணி இலங்கையே பெருமைப்படும் தீர்வுத் திட்டத்தை எட்ட உதவுமாறும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது கேட்டுக்கொண்டார் .
 
' மாகாணசபை நிர்வாகம் இல்லாதிருந்த வடக்கு மாகாணத்திலும் மாகாணசபை ஒன்றை நிறுவி , பொருளாதார அபிவிருத்தியிலும் ஜனநாயகத்திலும் எமது நாடு முக்கிய தருணத்தை எட்டியிருக்கின்ற சூழ்நிலையில் இந்த வரவுசெலவுத் திட்ட விவாதம் நடக்கிறது ' என்றார் மகிந்த ராஜபக்ஷ .
 
ஆளுங்கட்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான இனப்பிரச்சனை தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன
 
வடக்கு மாகாணசபையில் அரச சேவைகளை பலப்படுத்தவும் மும்மொழி செயற்திட்டத்தை விரிவுபடுத்தவும் வீட்டு வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார் .
 
' நான் தலைவர் ஆர் . சம்பந்தனிடமும் இந்த நாடாளுமன்றத்திடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபையிடமும் நல்லிணக்கத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் எமது நாட்டுக்கே உரித்தான வகையில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் ' என்றார் இலங்கை ஜனாதிபதி .
 
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் நடந்துவந்த இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன .
 
இடையில் இனப்பிரச்சனை தீர்வு பற்றி ஆராய்வதற்காக அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கம் அழைப்பு விடுத்துவருகிறது .
 
ஆனால் , அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமான பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பகமான தீர்வுத்திட்டம் கிடைக்கவாய்ப்பில்லை என்று கடந்த கால அனுபவங்களை சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குழுவில் இடம்பெற மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமுல்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி!

21st of December 2013
வடக்கு மாகாணத்தில் மேற்குலக நாடுகளின் உதவியுடன் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமுல்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி.
 
 வடக்கு மாகாணத்தில் மேற்குலக நாடுகளின் உதவியுடன் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமுல்படுத்த திட்டமிட்டு வருவதாக  தெரிகின்றது
 
2003 ஆம் ஆண்டு  புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாகம் தொடர்பான யோசனைக்கு இணையான நிர்வாகம் ஒன்றை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வடக்கின் ஆளுநர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குரல் கொடுத்தமை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
 
அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி வடக்கு மாகாண வீடமைப்பு மற்றும் போக்குவரத்து என்ற பெயர்களின் புதிய திணைக்களங்களை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சியை ஆளுநர் தோல்வியடைய செய்துள்ளார்.
 
அதேவேளை வடக்கில் இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாகாண சபைக்குரியதல்ல என இராணுவ அதிகாரிகள் மாகாண ஆட்சியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Friday, December 20, 2013

தொழிலுக்காக வெளிநாடு சென்ற 16 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் இல்லை!

20th of December 2013
மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்றிருந்த 16 இலங்கையர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்றது.
 
இந்த நபர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனங்களுடன் கூட்டாக ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய தெரிவித்தார்.
 
பல வருடங்களாக இந்த இலங்கையர்கள் குறித்து எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
 
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ளவர்களிடம் இருந்து இந்த வருடத்திற்குள் சுமார் 1800 முறைபாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சாதகம், வடமாகாணசபை: இன்று இந்த சாதகமும், பாதகமாகும் நிலைமை: மனோ கணேசன்!

20th of December 2013
சர்வதேச சமூகத்திடம், தனக்கு சார்பாக இந்த அரசு இன்று எடுத்து காட்டிவரும் ஒரே சாதகம், வடமாகாணசபை தேர்தலை நடத்தி, வடக்கில் வட மாகாணசபையை நிறுவியது ஆகும். இன்று இந்த சாதகமும், பாதகமாகும் நிலைமை வடக்கில் தோன்றி வருகிறது. வடக்கில் தேர்தலை நடத்தி, மாகாணசபை அமைக்கப்பட்டாலும்,  தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முதல்வரின் நிர்வாகத்துக்கு எந்த வித அதிகாரங்களும்  13ம் திருத்தத்தின்படி வழங்கப்படாமல், தொடர்ந்தும் ஆளுநர் ஆட்சியே நடக்கின்றது என்ற கருத்து  இன்று மேலெழுந்து  வருகிறது. அடுத்த மார்ச் மாதம் வரப்போகும் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் இதுபற்றி திட்டவட்டமாக தெரிந்து கொள்ளும் தேவை  உலகத்துக்கு இருக்கிறது.  இது உண்மையா என்பதை பற்றி உலகம் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம்தான் உலகம்  கேட்டு தெரிந்து கொள்ளுமே தவிர வடக்கு ஆளுநர் சந்திரசிறியிடம் கேட்காது என்பதை உங்கள் அரசாங்கம் புரிந்து  கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
வீ -எப்எம் பண்பலை வானொலியில் “சித்தாமுள்ள" என்ற சிங்கள மொழியிலான பிரபல நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்து கொண்ட  அமைச்சர் எச். ஆர். மித்ரபாலவிடம் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரையாடிய மனோ கணேசன் கூறியதாவது,
நீங்கள் பட்ஜெட்டில் மாகாணசபைகளுக்கு 148 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளீர்கள். இதில் ஊழியர் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு 111 பில்லியன் போக மிகுதி 37 பில்லியன்தான் மாகாணங்களின் அபிவிருத்தி நிதி. இதுவும் வட மாகாணசபை உட்பட ஒன்பது மாகாணசபைக்குமான தொகை என்பதை மறக்க வேண்டாம். ஆனால், பாதுகாப்பு, நகர அபிவிருத்தி  என்ற ஒரே ஒரு அமைச்சுக்கு மட்டும் 270 பில்லியன் ஒதுக்கியுள்ளீர்கள்.   
 
போலிஸ், காணி விடயங்களை தவிர்த்து பார்த்தாலும் கூட 35 விடயங்கள் மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விடயங்களையும் இன்று மத்திய அரசாங்கமே கையில் எடுத்து கொண்டுள்ளது. ஆகவே மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆனால், இந்த அரசியலமைப்பை மீறும் செயல் பற்றி ஏனைய மாகாணசபைகள் மூச்சு விடுவது இல்லை. வடமாகாணசபையும் இப்படியே சொல்வதை கேட்டுக்கொண்டு,  தருவதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு  இருக்கவேண்டும்  என எதிர்பார்க்கிறீர்கள்.
 
இந்த பம்மாத்தை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.  வடக்கில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை  வைத்துக்கொண்டே, அதிகாரங்களை ஆளுநர் மூலம் நடைமுறைபடுத்தும் உங்கள் போக்கு விரைவில் முடிவுக்கு வரும். ஒன்றில் மாகாணசபை முறைமையை ஒழியுங்கள். அல்லது  தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்துக்கு சட்டப்படி உள்ள அதிகாரங்களை வழங்குங்கள். உலகத்துக்கு வட மாகாணசபை தேர்தலை நடத்திவிட்டோம், வட மாகாணசபையை அமைத்துவிட்டோம் என அறிவித்தல்  கொடுத்துவிட்டு மறுபுறம் அதை ஒரு புஸ்வாண வெற்று  சபையாக வைத்திருக்க பார்க்கிறீர்கள்.  நாடு முழுக்க மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரம் இல்லையென்றால் எதற்காக 111 பில்லியன் ரூபா செலவில் ஊழியர்களும், கட்டிடங்களும், நிர்வாக செலவுகளும் என கேட்கிறேன்.
 
அடுத்த வருடம் மார்ச் மாதம் வருகிறது. அதற்கு முன்னர் உலகம் வடக்கில் மாகாணசபை நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறது. அதுபற்றி இப்போதே தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆளுனர் சந்திரசிறி ஒரு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல. எனவே வடக்கு  மாகாணசபை நிர்வாகம் பற்றி  வடக்கு முதல்வர் கூறும் கருத்துக்கு மிகவும் முக்கியத்துவம் காத்திருக்கின்றது. முதல்வர் என்ற பெயரில் வடமாகாணசபையை தொடர்ந்து வெற்று புஸ்வான சபையாக   வைத்துக்கொண்டு இருக்க விக்கினேஸ்வரானால் முடியாது. மறுபுறம் இந்த சபையை சுட்டிக்காட்டி உலகத்துக்கு பொய்மை தோற்றம் காட்டும் அரசின் முயற்சிக்கு  துணை போகவும் அவரால் முடியாது.  ஆகவே அவர் உரிய நேரத்தில் உண்மையைதான் கூறுவார். அதைதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
 
அதற்கு முன்னர் வடமாகாணசபைக்கு, 13ம் திருத்தத்தின்படி உரிய அதிகாரங்களை வழங்கி நிலைமை பாரதூரமடையமுன் அதை சீர் செய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. இதைத்தான் உங்கள் அரசு தலைவர் ஜானதிபதிக்கு சில தினங்களுக்கு முன்னர் நான் சொன்னேன். இப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச, வடக்கு வசந்தம் திட்ட பொறுப்பில் இல்லையென தெரிகிறது. அதில் இப்போது நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொறுப்பு வகிப்பதாக, ஜனாதிபதியின் பேச்சில் தெரிகிறது. எனவே நேற்று  நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஒரு நிகழ்வில் சந்தித்த போது இதையே அவருக்கு நான் சொன்னேன்.  வடக்கில் சுமூகமான நிலைமை நிலவுமானால் அது தெற்கில் எங்களுக்கும் நல்லது என்பதாலும் இதை நான் சொன்னேன். இதை  கேட்டு தவறை திருத்தி கொள்வது உங்கள் பொறுப்பு. நிலைமை கைமீறி போனபின் விக்கினேஸ்வனையோ, எங்களையோ குறை சொல்வதில் பிரயோஜனம் இல்லை.

இலங்­கைக்கு எந்த நோக்­கத்­துக்­காக விசா எடுத்து வந்தீர்களோ அந்த நோக்­கத்துடன் செயற்­ப­டுங்கள்: வியா­பா­ரத்தில் ஈடு­பட்ட இந்தியப் பிரஜைகளுக்கு ஆனந்தி கன­க­ரட்ணம் அறிவுரை!

20th of December 2013
இலங்­கைக்கு எந்த நோக்­கத்­துக்­காக விசா எடுத்து வந்தீர்களோ அந்த நோக்­கத்துடன் செயற்­ப­டுங்கள்´ என உல்­லாசப் பயண விசாவில் இலங்கைக்கு வந்து மன்னாரில் சட்­ட­வி­ரோதமாக துணி வியா­பா­ரத்தில் ஈடு­பட்ட இந்தியப் பிரஜைகளுக்கு மன்னார் நீதவான் ஆனந்தி கன­க­ரட்ணம் அறிவுரை கூறியுள்ளார்.

பண்டிகைக் காலங்களை முன்­னிட்டு, இலங்கை வந்து வியா­பார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்­தியப் பிர­ஜைகள் இருவர் நேற்று (19) மன்னார் நீதி­மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் நீதி­மன்றத்தில் இடம்­பெற்ற இருவேறு வழக்­கு­களில் இரண்டு இந்­தியப் பிர­ஜை­க­ளுக்கு எதி­ரா­கவும், இலங்கையர்கள் இருவருக்கு எதி­ரா­கவும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்­தனர்.

இதில் இந்­தியர் இருவர் இலங்­கைக்கு உல்­லாசப் பயண விசாவில் வந்து இந்­திய ஆடை அணி­க­லங்­களை சட்­ட­வி­ரோதமாக விற்பனை செய்ததாகவும், ஏனைய இரு இலங்­கை­யர்­களும் இவர்­க­ளுக்கு உறுது­ணை­யாக செயற்பட்­ட­தாகவும் வழக்கு தாக்கல் செய்யப்­பட்­டி­ருந்­தது.

இதன்போது, "எந்த அடிப்­ப­டை­யி­லான விசாவில் இலங்­கைக்கு வருகின்­றீர்­களோ அதற்­க­மைய செயற்­பட்டால் இங்கு இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாது.

ஆகவே வியா­பார நோக்­கோடு இங்கு வர விரும்­பினால் அதற்­கான பய­ணச்­சீட்டோடு வந்து செயற்­ப­டுங்கள் என நீதி­பதி அறி­வுரை வழங்கினார்.

மேலும் அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டதுடன், ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பது இனிமேல் நடைபெறமாட்டாது: யாழ். இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம்!

20th of December 2013
இந்திய மீனவர்களின் அத்துமீறி இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பது இனிமேல்நடைபெறமாட்டாது என யாழ். இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் உறுதியழித்ததாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாச தலைவர் தெரிவித்தார்.
 
இந்திய மீனவர்கள் பிரச்சனை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கையின்கடலுக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடமாட்டார்கள் என்ற தகவலைப் புதுடில்லி தமக்கு வழங்கியிருப்பதாக வட மாகாண மீனவ சங்கப் பிரதிநிதிகள் நேற்றைய சந்திப்பில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய மீனவர்களினால் வடகடல் மீனவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டதற்கு நஷ்;டஈடு தொடர்பாக இந்திய அரசாங்கத்துடனும் இலங்கை அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூடிய விரைவில் நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.யுடனான சந்திப்பை ஈ.பி.டி.பி புறக்கணிப்பு!

20th of December 2013
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் பங்கேற்கவில்லை.

இந்த கலந்துரையாடல், யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள 21 உள்ளூராட்சி மன்றங்களில் 17 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மட்டுமே இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் ஆட்சி அதிகாரத்தில் கீழிருக்கின்ற யாழ்.மாநகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்களை இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பிரதேச மட்ட அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்கு முறைகள், உள்ளூராட்சி மன்றங்களிற்கான சட்ட அமுலாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்தாகும்.

அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்க: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஒன்று கூடுகிறது!

20th of December 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் எதிர்வரும் 24ஆம் திகதி வவுனியாவில் ஒன்று கூடவுள்ளனர் என, கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தன்னிச்சையான செயற்பாடுகள், - மாகாணசபை சட்டங்களை மீறிய நடவடிக்கைகள், அவற்றால் அங்கு எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வைத் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலாக இந்த ஒன்றுகூடல் அமையவுள்ளது.

இதன்போது, தமிழர் தாயகத்தில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் தீர்வு நடவடிக்கையில் அரசு காட்டும் அசமந்தப் போக்கு ஆகியவை உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் தீர்க்கமான முடிவு ஒன்று எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பு தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கும் இரணைமடு குடிநீர் விவகாரம் பற்றியும் பிரதானமாக இங்கு  ஆராயப்படவுள்ளது. தற்போது பிரதேச வாதத்தினை தோற்றுவிக்கலாமென்ற அச்சம் ஒருபுறமும் மறுபுறம் இரணை மடுக் குளத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ள ஒதுக்கப்பட்டுள்ள நிதி வடமாகாணசபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட நிதியினை விட அதிகமென்பதால் அந்த நிதியினை தவறவிடக்கூடாதென்ற கருத்துக்கள் பலம் பெற்றுள்ளதாலும் இந்த முக்கிய சந்த்திப்பில்  இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 9 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண அமைச்சர்கள், கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் முதன்முதலாக ஒன்றுகூடி நடத்தும் முக்கிய சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே இந்த முக்கிய சந்திப்பை வவுனியாவில் நடத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது.

இரா.சம்பந்தன் தலைமையில்  நடைபெற்ற இந்த நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பா.அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சீ.யோகேஸ்வரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ள 2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாசிப்புக்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அரசால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சுக்கே இம்முறையும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையால் மேற்படி முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது: சீ.வி.விக்கினேஸ்வரன்!

20th of December 2013
கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது. எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார்
 
வடக்கு மாகாணசபையினது முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பொன்றினை நடத்திய அவர் அங்கு உரையாற்றுகையிலேயே இக்குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தார்.

எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருகின்றார்கள் என்றால் எமக்கிடையே ஏதோ குறைபாடு இருக்கின்றதென்று அர்த்தம். பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருடன் ஒத்துப்போக முடியாது போனால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம்.
 
அல்லது ஒத்துப்போக முடியாதவர் தமது பதவிகளை ராஜினாமாச்செய்யலாம். அதை விடுத்து எமது கட்சி சார்பில் கொண்டுவரும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை தோற்கடிப்பது மன்னிக்க முடியாத குற்றம். ஏனெனில் அதில் குறைகள்; இருந்தால் ஏற்கனவே அதனை பேசி தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறான நடவடிக்கைகள் எடுத்து தமது வரவு செலவுத்திட்டத்தை; தாமே தோற்கடித்தவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தனதுரையினில் தெரிவித்தார்.
 
அத்துடன் எமது உட்கட்சி பூசல்கள் வெளித்தெரிவதை தவிர்க்க கேட்டுக்கொண்ட அவர் வடக்கு மாகாணசபையில் உள்ளுராட்சி மன்ற விடயம் தன்னுடன் தொடர்பு பட்டதென தெரிவித்த அவர் வடக்கு மாகாணசபை இவ்விவகாரங்களை இனி கண்காணிக்குமெனவும் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு வசமுள்ள வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வலி.கிழக்கு மானிப்பாய் பிரதேச சபைகள் வரவு செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Thursday, December 19, 2013

தென்னிலங்கை வியாபாரிகளை தடைசெய்து கட்டுப்படுத்தும் வகையில் மாகாண சபை மூலம் நியதிச் சட்டம் கட்டுப்படுத்த முடியும்: டெனிஸ்வரன்!

20th of December 2013
உள்ளூர் உற்பத்திகளை சகல வர்த்தகர்களும் முன்னிலைப்படுத்த வேண்டும் என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண அமைச்சர்கள், யாழ். மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற விசேட ஒன்றுகூடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வட மாகாணத்திற்கான ஒதுக்கீடுகள் என்பது மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டாலும், எமது வர்த்தகர்களை நிச்சயமாக ஏதோ ஒரு வழியில் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

எதிர்காலத்தில் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் வர்த்தக வாணிபத்திற்கு உதவ முன் வந்துள்ளன.

உள்ளூர் உற்பத்திகளை சகல வர்த்தகர்களும் முன்னிலைப்படுத்த வேண்டும். அதனூடாக எமது மக்களிடம் பணப் புழக்கதினை மீண்டும் உருவாக்க முடியும். தென்னிலங்கை வியாபாரிகளை தடைசெய்வது என்பது முடியாத காரியம்.

அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் எமது மாகாண சபை மூலம் நியதிச் சட்டங்களை உருவாக்கி அவர்களை கட்டுப்படுத்த முடியும்.

எதிர்காலத்தில் உங்களது ஒத்துழைப்பிருந்தால் ஒரு நிர்ணய விலையின் கீழ், சகல வர்த்தகர்களும் தங்களது பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் எமது மக்களது எண்ணங்களை மாற்றமடைய செய்து தென்னிலங்கை வியாபாரிகளின் வருகையை முற்றாக நிறுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள வங்கிக் கடன் மற்றும் ஏனைய வர்த்தக பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் யாழ் வர்த்தகத்தை எவ்வாறு மீளக் கட்டி எழுப்புவது போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

தேசியக்கொடியை ஏற்ற மறுத்த வட மாகாண அமைச்சர் மீது நடவடிக்கை எடுங்கள்: ஐ.தே.க. எம்.பி.!

19th of December 2013
இலங்கை தேசியக்கொடியை ஏற்ற மறுத்த வட மாகாண சபை அமைச்சர் தொடர்பில் அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கோரிய ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுஜீவ சேனசிங்க,
 
இந்த நாட்டின் தேசியக் கொடியை அவமதிக்கும் உரிமை எவருக்கும் இல்லையெனவும் கூறினார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
 
இதேவேளை, வட மாகாண அமைச்சர் ஒருவர் தேசியக்கொடி ஏற்ற மறுத்துள்ளார். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அந்த அமைச்சர் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போதுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரை அரசு நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
வட மாகாண முதலமைச்சர் மிகவும் சிறந்தவர். மிகுந்த கல்விமான். விடயங்களை அறிந்தவர். எனவே, இந்த முதலமைச்சரை நன்கு பயன்படுத்தி பல விடயங்களுக்கு தீர்வுகாணமுடியும். இச்சந்தர்ப்பத்தை, இந்த முதலமைச்சரை பயன்படுத்த அரசு தவறி விடக்கூடாது என்றார்.கொழும்பு மாவட்ட எம்.பி. சுஜீவ சேனசிங்க.
 

வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து சந்திரசிறியை நீக்கக் கூடாது: தேசிய அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை!

19th of December 2013
வடக்கு மாகாண புதிய ஈழ திட்டத்தின் பூர்வ நிபந்தனையாக வடக்கு மாகாண ஆளுநரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையாகும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள ஆவணம் ஒன்றில் அந்த அமைப்பு இதனை குறிப்பிட்டுள்ளது.
 
வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ஜீ.ஏ. சந்திரசிறியை நீக்கி விட்டு சிவில் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என அந்த மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் அழுத்தமாக கோரிக்கை விடுத்து வருகிறார்.
 
முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் இருக்கும் பிரதான தடை ஆளுநர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
 
இதனை தவிர கொழும்பு பேராயர் கதிர்னால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் புலிகளின் ஆதரவாளரான ராயப்பு ஜோசப் ஆண்டகை உள்ளிட்ட ஆயர்கள் பேரவையும் வடக்கு மாகாண ஆளுநரை நீக்குமாறு கோரியுள்ளன.
அதே சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய பாராளுமன்றமும் இந்த கோரிக்கையை முன்வைத்து யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
 
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் உச்சத்தில் இருப்பது ஆளுநரை நீக்க வேண்டும் என்பதாகும்.
ஆளுநரை நீக்குவது என்பது புதிய ஈழ திட்டத்தின் பூர்வ நிபந்தனையாக மாறியுள்ளது. தற்போதைய ஆளுநர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதால் மட்டும் பெருத்தமற்றவராகி விடமாட்டார் என்பது எந்த குடிமகனும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.
 
சட்டவிரோத பயங்கரவாத படையில் சேவையாற்றிய கெரில்லா படையினருக்கு வடக்கு மாகாண சபையின் பதவிகளை வகிக்க முடியும் என்றால், நாட்டின் சட்டரீதியான இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ஏன் ஆளுநராக பதவி வகிக்க முடியாது என தமிழ் மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இதனால் வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து சந்திரசிறி நீக்கப்படக் கூடாது என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் இலங்கை வந்தார்!

19th of December 2013
பாகிஸ்தான் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கை வந்துள்ளார். இதன்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்திப்பதுடன் நாடாளுமன்ற அமர்வினையும் பாக். சபாநாயகர் பார்வையிடுவார்.

இலங்கை - பாகிஸ்தான் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

மன்னார் பெரியகடையில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை அகற்ற கோரி எதிர்ப்பு பேரணி!

19th of December 2013
மன்னார் பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் தனியார் ஒருவருடைய
வீட்டில் தற்போது அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை உடனடியாக அகற்றக்கோரி பெரியகடை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும் , பெரிய கடை கிராம மக்களும் இணைந்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டனர் .
 
இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் பெரியகடை உப்பள பிரதான வீதியில் ஒன்று கூடிய கிராம மக்கள் குறித்த மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்து பெரிய கடை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தினூடாக ஊர்வலமாக சென்று மன்னார் நகர சபையை சென்றடைந்தனர் .
 
பின் தமது பிரச்சினைகளை தெரிவித்தனர் . மன்னார் பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் மது விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது .
 
பெரியகடை கிராமம் பிரதான இடத்தில் அமைந்துள்ளது . இக்கிராமத்தைச் சேர்ந்த எவரும் குறித்த மதுபான சாலையை அமைக்க அனுமதி வழங்கவில்லை .
 
நீர் வடிகாலமைப்பு மற்றும் சமூர்த்தி உதவித்திட்டம் ஆகியவற்றிற்கு இக்கிராம மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பங்களை தவரான முறையில் பயன்படுத்தி இக்கிராம மக்களும் ஆதரவு வழங்குவதாக கோரி குறித்த மது விற்பனை நிலையத்தினை அமைத்து வருகின்றனர் .
 
இவ்விடத்தில் அமைப்பது மது விற்பனை நிலையம் என்று ஒரு சில வராங்களுக்கு முன்புதான் இக்கிராம மக்களுக்கு தெரிய வந்தது .
 
இந்த நிலையிலே இக்கிராம மக்கள் அனைவரும் இணைந்து எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டோம் என அந்த மக்கள் தெரிவித்தனர் .
 
இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபையின் தலைவர் எஸ் . ஞானப்பிரகாசம் , உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் , நகர சபை உறுப்பினர் என் . நகுசீன் ஆகிஆயோரிடம் மகஜரை கையளித்தனர் .
 
- இதனைத் தொடர்ந்து குறித்த மக்கள் பேரணியாக சென்று மன்னார் பிரதேசச் செயலக அதிகாரிகளிடம் மகஐரை கையளித்தனர் .
 
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை , மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை , உற்பட அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர் .

இடம் பெயர்ந்தோர் குறித்து விநாயகமூர்த்தி முரளிதரனினால் (கருணா) வழங்கிய தகவல்கள் முற்றிலும் தவறானது!

19th of December 2013
யாழ் . மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில்
மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் ( கருணா ) தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன .
 
வலி . வடக்கு பிரதேச செயலகத்தின் அறிக்கையில் மீளத்திரும்புபவர்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும் , நாடாளு மன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
 
தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் , 9 ஆயிரத்து 905 குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்ப வேண்டியிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது .
 
இந்தக் கூட்டம் இடம்பெற்ற பின்னர் வலி . வடக்கில் எந்தவொரு மீளத்திரும்புதலுக்கும் மக்கள் அனுமதிக்கப்படவில்லை . இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்றத்தில் , நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2014 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இடம் பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புதல் குறித்துத் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
 
' வடக்கு மாகாணத்தில் , யாழ் . மாவட்டத்தில் 31 ஆயிரத்து 188 குடும்பங்களும் , மன்னார் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 22 குடும்பங்களும் , வவுனியா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 981 குடும்பங்களும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 39 ஆயிரத்து 660 குடும்பங்களும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரத்து 594 குடும்பங்களும் மீளத் திரும்பியுள்ளன .
 
இதேவேளை , யாழ் . மாவட்டத்தில் ஆயிரத்து 228 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 410 பேர் முகாம்களிலும் 4 ஆயிரத்து 550 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 355 பேர் நண்பர்கள் அல்லது உறவினர் வீடுகளிலுமாக மொத்தம் 5 ஆயிரத்து 778 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 765 பேர் மீளத் திரும்ப வேண்டியவர்களாகவுள்ளனர் .
 
கிளிநொச்சி மாவட்டத்தில் முகாம்கள் இல்லை . எனினும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் 314 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 140 பேர் மீளத் திரும்ப வேண்டியவர்களாகவுள்ளனர் ' என்று அமைச்சர் என்று அமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் .
 
ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற வலி . வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 9 ஆயிரத்து 905 குடும்பங்கள் மீளத்திரும்ப வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . இதன் மூலம் அமைச்சர் கூறிய தகவலுக்கும் வலி . வடக்கு பிரதேச செயலக அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளமை தெரியவந்துள்ளது .

தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

19th of December 2013
தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவர் கிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று எதிர்ப்புக் போராட்டமொன்று நடாத்தப்பட்டது.
 
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் பிரதான வீதியோரத்தில் நடாத்தப்பட்ட இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
 
30 வருட காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகம் தற்போது படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து பல்கலைக்கழகத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் பல்கலைக்கழக சமூகம் இந்த கருத்தினை கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழக சமூகம் என குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன் செல்வராசா அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழல் இடம்பெறுவதாக கடந்த ஆறாம் திகதி பாராளுமன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டினை முன்வைத்தமை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நற்பெயரையும் புகழையும் களங்கப்படுத்திய ஒரு செயலாகும். இச் செயலானது பல்கலைக் கழக சமூகத்தினரிடையே மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
பல்கலைக்கழக அபிவிருத்தியில் இதுவரை எவ்வித அக்கறையோ அல்லது நேரடி பங்களிப்போ செய்யாத கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவர்கள் மிகுந்த முனைப்புடன் அபிவிருத்திப் பாதையில் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்ற எமது ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்திற்கும் அதன் உபவேந்தருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்திலே உரையாற்றியிருப்பதானது, எமது பல்கலைக்கழக சமூகத்திற்கும் அதன்பால் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் மிகுந்த வேதனையையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது.
 
கிழக்குப் பல்கலைக்கழகம் கடந்த மூன்று தசாப்த காலமாக யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு படிப்படியாக பல்வேறு வழிகளிலும் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உள்ளது.
 
இங்கு ஊழல் இடம்பெறுகின்றன என்று எழுந்தமானமாக கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருப்பதானது பல்கலைக்கழக சமூகத்தினரிடையேயும் பல்கலைக்கழக நலன் விரும்பிகள் மத்தியிலும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
 
மட்டக்களப்பு மக்களின் பெறுமதியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று, மட்டக்களப்பு மக்களே பெரும் சொத்தாக மதிக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சேறு பூசும் வகையில், விளக்கமற்ற பொறுப்பற்ற பேச்சுக்களை பொன் செல்வராசா எம்பி அவர்கள் நிறுத்திவிட்டு, உங்கள் பகுதியில் இருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நேரடியான விஜயம் செய்து தெளிவுகளைப் பெற்ற பின் உங்கள் சொற்பொழிவுகளை மேற்கொள்வீர்களாக இருந்தால் பெறுமதியாக இருக்குமென வேண்டிக் கொள்கிறோம் என அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளியான இராணுவ கொப்ராலுக்கு 81 வருட கால கடூழிய சிறை!

19th of December 2013
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியான இராணுவ கொப்ராலுக்கு 81 வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணதிபதி இன்று இத்தீர்ப்பை அறிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ கொப்ரால் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

7500 ரூபா அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 வருடகால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என நீதிபதி அறிவித்துள்ளார். 
 

சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு: இலங்கை அரசாங்கம் மறுப்பு!

19th of December 2013
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவை பெறுவதற்காக சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
 
நாட்டின் உண்மையான  நிலைமைகளை கண்டறிய சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
கள் தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கு வருகை தந்தனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்துவது போல் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் அழைத்து வரவில்லை.
 
வழக்கமாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை லண்டனுக்கு சுற்றுலா பயணம் செல்வது போல் அவர்கள் இங்கு வந்துள்ளனர் என்றார்.
பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உட்பட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
 
அத்துடன் அவர்களின் பெயர் விபரங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
அதேவேளை பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற்ற போது இஸ்ரேலில் இருந்து இரகசியமான முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்ததாகவும் மங்கள சமரவீர தகவல் வெளியிட்டிருந்தார்.

இஸ்ரேல் பிரதிநிதிகள் இலங்கை வந்த தனியார் விமானம் பற்றிய தகவல்களை வெளியிட்ட மங்கள எதற்காக இஸ்ரேல் பிரதிநிதிகள் இலங்கை வந்தனர் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இஸ்ரேல் பிரதிநிதிகள் பொதுநலவாய நாடுகளி வர்த்தக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தாக தெரிவித்தார்.
 

வடக்கு மாகாண வரவு செலவுத் திட்டம் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை!

19th of December 2013
வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பேரவைச் செயலகத்தின்இன்னமும் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் கடந்த 10, 11, 12 ஆம் திகதிகளில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் இடம் பெற்றது. இதன் பின்னர் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டிருந்தது. இவ்வாறு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவரின் அனுமதி பெறப்பட்டாலே, அங்கீகரிக்கப்பட்டதாக அமையும்.

இதுவரை வரவு செலவுத் திட்டம் வடக்கு மாகாணப் பேரவைச் செயலகத்தினால், வடக்கு மாகாணப்பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்படவில்லை எனவும், இதனால் அது ஆளுநரின் ஒப்பத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லையென பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தெரிவித்தார்.

பேரவைச் செயலகம் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் (வயது 74)  மற்றும் செயலாளர் கிருஸ்ணமூர்த்தி (வயது 83) ஆகிய இருவராலும் நிர்வகிக்கப்படுகின்றது.  

யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள், கொலைகள், கொள்ளைச் சம்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன: சுந்தரம் அருமைநாயகம்!

19th of December 2013
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை பதிவு செய்வதையே யாழ். மாவட்டப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற அதேவேளை, குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவோ அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவோ தெரியவில்லையெனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள், கொலைகள், கொள்ளைச் சம்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. யாழ். பொலிஸார் குற்றச் செயல்களை மாத்திரம் பதிவு செய்துவிட்டு தங்களது கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றார்கள்.
குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவது குறைவடைந்துள்ளதால், யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டார்.

Wednesday, December 18, 2013

இரத்தப் பரிசோதனைக்கு வந்த வயோதிபப் பெண்ணின் தங்கநகைகள் அபகரிப்பு!

19th of December 2013
இரத்தப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த வயோதிபப் பெண்ணொருவரின் தங்கநகைகளை வைத்தியசாலை ஊழியர்ரென தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அபகரித்துச்சென்றுள்ளார்.
 
தீவுப்பகுதியிலிருந்து வந்த வயோதிபப் பெண்ணொருவரின் 6 பவுண் தங்கநகைகளே இவ்வாறு அபகரித்துச்செல்லப்பட்டுள்ளன.
 
யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை காலை இரத்தப் பரிசோதனைக்காக மேற்படி வயோதிபப் பெண் வந்துள்ளார். இந்நிலையில், மேற்படி வயோதிபப் பெண் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு செல்லத் தயாரானபோது அவரின் தங்கநகைகளை தான் வைத்திருப்பதாக தன்னை வைத்தியசாலை ஊழியரென அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் கூறியுள்ளார்.
 
இதனை நம்பி தனது தங்கநகைகளைக் கொடுத்துவிட்டு இரத்தப் பரிசோதனை செய்துவிட்டு திரும்பிவந்த வயோதிபப் பெண், அந்த நபரைக் காணாது திகைத்து நின்றார். இதனைத் தொடர்ந்து மேற்படி வயோதிபப் பெண்ணின் தங்கநகைகளை குறித்த நபர் அபகரித்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐங்கரநேசன் தேசியக் கொடி அரியநேத்திரன் தேசிய கீதம், சர்ச்சைக்கு மேல் சர்ச்சை!

19th of December 2013
இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
அவரது கருத்துக்கு பல்தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
வட கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகள், கலாச்சார நிகழ்வுகள் அல்லது இலங்கையின் அமைச்சர்கள் வரும்போது தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி பணிக்கப்படுகிறார்கள் என்று அரியநேத்திரன் கூறுகிறார்.
 
எனவே வட கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களில் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டிய அவசியம் இல்லை என்று தான் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறியதாக அவர் தெரிவித்தார்.
 
சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் பாடவேண்டுமாக இருந்தால், தேசிய கீதமே பாடவேண்டிய அவசியம் இல்லை என்றும் பாராளுமன்றத்தில் தான் வலியுறுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
 
வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஒரு நிர்வாக மொழியாக தமிழ் இருக்கும்போது, ஏன் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 
எனினும் பாராளுமன்றத்தில் தான் தெரிவித்தக் கருத்துக்கள் தனது சொந்தக் கருத்துக்ளே எனவும், அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்லவென்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமாகாண சபையின் அமைச்சர் ஐங்கரநேசன் மன்னாரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
 

ஐந்து வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களுடன் தமிழ், சிங்கள மொழிகளில் கடமையாற்றலாம்!

19th of December 2013
ஐந்து வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களுடன் தமிழ், சிங்கள மொழிகளில் கருமமாற்றுவது தங்களுடைய இலக்காக உள்ளதென பொலிஸ் திணைக்களம் நேற்று புதன்கிழமை கூறியது.

2008  ஆம் ஆண்டிலிருந்து 1500 சிங்கள மொழி பொலிஸ்காரர்களும் 892 தமிழ் மொழி பொலிஸ்காரர்களுக்கும் மொழிப்பயிற்சி வழங்கபபட்டதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.

மக்களுக்கு சிறந்த சேவையற்றுவதற்கு மொழி தடையாக அமைவது யுத்தம் முடிவதங்கு முன்னரே இனங்கானப்பட்டது. இந்நிலையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் கூடுதலாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் நியமிக்கப்பட்டனர்.

இப்போது வடக்கு கிழக்கில் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதியப்படுகின்றன இது பெரிய சாதனையாகும். இன்னும் 5 வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் சிங்களத்துடன் தமிழிலும் கருமங்களை ஆற்றும் வசதிகளை ஏற்படுத்தும் இலக்கை நோக்கி செயற்படுகின்றோம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.

தமிழ் பேசும் 240 பொலிஸ்காரர்களுக்கு செவ்வாயன்று புதிதாக சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவார்கள் என அவர் கூறினார்.

கொத்தட்டுவ நகரத்தில் பயணியை குடையால் தாக்கி கொன்ற நடத்துனருக்கு சிறை!

19th of December 2013
கொத்தட்டுவ நகரத்தில் வைத்து பயணி ஒருவரை தாக்கி கொன்றமைக்காக 175 இலக்க வழித்தட தனியார் பஸ்ஸில் நடத்துனராக கடமை புரிந்தவருக்கு இருபது வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதியே நடத்துனர் பயணியை தாக்கியுள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட சாமில சம்பிக்கா என்பவருக்கும் பயணியான  விஜேதாஸ என்பவருக்கும் இடையில் குறித்த தினத்தன்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போதே நடத்துனர் பயணியை குடையால் அடித்து கொன்றதாக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரான பஸ் நடத்துனர் தனக்கு எதிரான குற்றத்தை ஒத்துக்கொண்டார்.

இதனையடுத்தே இது கை மோசக்கொலை என அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய அவருக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 150இ000 ரூபா நட்டஈடு செலுத்தும்படியும் உத்தரவிட்டார்.

 

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பெயர்களை பயன்படுத்தி செயற்பட்டுவந்த 300 பேர் மீது விசாரணை!

19th of December 2013
ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களின் பெயர்­களைப் பயன்­ப­டுத்தி செயற்­பட்­டு­வந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்ற 300 பேர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்சர் லக் ஷ்மன் சென­வி­ரத்ன நேற்று சபையில் தெரி­வித்தார்.
 
பாரா­ளு­மன்­றத்தி நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் தெரி­வுக்­குழு அறிக்­கை­யிடல் மீதான அமைச்­சுக்­களின் கீழான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
 
நேற்­றைய விவா­தத்தின் போது உரை­யாற்­றிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாத்­தறை மாவட்ட எம்.பி. மங்­கள சம­ர­வீர, மாணிக்­கக்­கற்கள் பதிக்­கப்­பட்­டதும் 800 வரு­டங்கள் பழை­மை­யா­ன­து­மான தொல்­பொருள் ஒன்றை ஜப்­பா­னியப் பிரஜை ஒரு­வ­ருக்கு விற்­பனை செய்­ய­முற்­பட்ட போது அது பொலி­ஸா­ரிடம் அகப்­பட்­ட­தாகப் பத்­தி­ரி­கை­களில் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­த­தா­கவும், இதன் பின்­ன­ணியில் ஜனா­தி­ப­தியின் இணைப்­பாளர் ஒருவர் செயற்­பட்­டி­ருந்­த­தா­கவும் கூறி­யி­ருந்தார்.
 
இதற்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே அமைச்சர் லக்ஷ்மன் சென­வி­ரத்ன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
மேலும் இடம்­பெற்று வரு­கின்ற விசா­ரணை நட­வ­டிக்­கை­களின் பின்னர் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் யார் என்­பது குறித்து வெளிப்­ப­டுத்­தப்­படும் என்றும் கூறினார்.
 
அது­மாத்­தி­ர­மின்றி, மங்­கள சம­ர­வீர எம்.பி. கூறு­வ­து­போன்­ற­தொரு இணைப்­பாளர் ஜனா­தி­ப­திக்குக் கிடை­யாது என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியினதும் முக்கியஸ்தர்களினதும் பெயர்களை விற் றுப்பிழைக்கும் நபர்கள் தொடர்பில் விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்றார்.

தெஹி­வளை பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு தடை விதித்­தமை எனக்கு தெரியாது - ஹக்கீமிடம் ஜனாதிபதி!

19th of December 2013
தெஹி­வளை பிர­தே­சத்தில் மூன்று பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு தெரி­விக்­கப்­ப­டு­வது பற்றி தம்­மிடம் அமைச்சர் ஹக்கீம் புதன்­கி­ழமை கூறும்­வரை வேறெ­வரும் அது­பற்றி சொல்­ல­வில்­லை­யென ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்ளார். இந்த விட­யத்தில் உரிய கவனம் செலுத்­தப்­ப­டு­மென்றும் ஜனா­தி­பதி அமைச்சர் ஹக்­கீ­மிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

தெஹி­வளைப் பகு­தியில் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழுகை நடத்­து­வ­தற்கு பொலிஸார் தடை விதித்­துள்­ளமை குறித்தும் முஸ்லிம் பள்ளி வாசல்­க­ளுக்கு எதி­ராக மேற்கொள்­ளப்­படும் வன்­மு­றைகள் தொடர்­பிலும் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கவ­னத்திற்கு ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்­க­ரஸின் தலை­வரும் நீதி­ய­ம­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கொண்­டு­வந்­துள்ளார்.

நேற்றுக் காலை அலரி மாளி­கையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவைச் சந்­தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ் விடயம் குறித்து அர­சாங்­க­மா­னது உரிய கவனம் செலுத்த வேண்டும். பள்­ளி­வா­சல்கள் தொடர்­பான விவ­காரம் அர­சாங்­கத்­திற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தோடு முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் கொந்­த­ளிப்­பையும் விச­னத்­தையும் உண்­டு­பண்­ணு­கின்­றது. எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தெஹி­வளை களு­போ­வில மஸ்­ஜிதுல் தாருல் ஷாபி, தெஹி­வளை தாருல் அர்க்கம், தெஹி­வளை அத்­தி­டிய மஸ்­ஜிதுல் ஹிபா ஆகிய பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு பொலிஸார் வற்­பு­றுத்­து­வது பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்டி, பள்­ளி­வாசல் தொடர்­பான விவ­காரம் அர­சாங்­கத்­திற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தோடு முஸ்­லிம்கள் மத்­தியில் கொதிப்­பையும் விச­னத்­தையும் உண்டு பண்­ணு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.

விஷம சக்­தி­களால் உந்­தப்­பட்டு, அர­சாங்க உயர்­மட்­டத்­திற்கு தெரி­யாத விதத்தில் பொலிஸார் தான்­தோன்­றித்­த­ன­மாக இவ்­வா­றான இன முறு­கலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சமய விரோத நட­வ­டிக்­கை­களில் நேர­டி­யாக ஈடு­ப­டு­வது கண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­தென்று அமைச்சர் ஹக்கீம் கூறி­யுள்ளார்.

மூன்று பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­டு­மாறு தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்பில் தாம் அறிந்­தி­ருக்­க­வில்லை என அமைச்சர் ஹக்­கீ­மிடம் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி, தெஹி­வளை பிர­தே­சத்தில் மத்­ரஸா நடத்­து­வ­தென்று அனு­மதி பெற்று தொழுகை நடத்தும் ஓரி­டத்தைப் பற்றி மட்டும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக சொல்­லி­யுள்ளார். அது­பற்றி அமைச்சர் பௌ­சியும் தம்­மிடம் சுட்­டிக்­காட்டி கவலை தெரி­வித்­த­தா­கவும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் முஸ்­லிம்கள் நாள்­தோறும் ஐவே­ளைகள் தொழு­கையில் ஈடு­ப­டு­வது இஸ்­லாத்தின் கட்­டாய கட­மை­களில் ஒன்று என்ற கார­ணத்­தினால் மத்­ர­ஸாக்­களில் தொழு­வ­தைக்­கூட தடுக்­கக்­கூ­டா­தென ஜனா­தி­ப­தி­யிடம் தெரிவித்துள்ளார்.

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...