Sunday, December 22, 2013

குற்றவியல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் - ரொஹான் குணரட்ன!

23rd of December 2013
இலங்கையின் குற்றவியல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் நாசீ விரோத சட்டங்களுக்கு நிகரான வகையில் இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் தற்போது காணப்படும் சட்டங்கள் போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது வேறும் தரப்பினரோ பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தால் அவர்களை தண்டிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதித்தமை அரசாங்கம் விட்ட தவறாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதித்ததன் மூலம் பயங்கரவாத பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை போற்றி புகழ்ந்து ஆற்றும் உரைகளை தடை செய்யக் கூடிய வகையில் நாட்டில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நேரடியாகவோ மறைமுகமாகவோ பயங்கரவாதத்தை போற்றும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தேசிய கொடி, தேசிய கீதம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் செயற்படுவதனை அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், அவ்வாறு மேற்கொள்வதனால் பயங்கரவாதம் மீள உருவாகக் கூடிய சாத்தியங்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுடன் தொடர்புகளைப் பேணும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வெளிநாடுகளில் தொடர்ந்தும்  புலிகள் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வழிகளில் தமி;ழ் அசியல்வாதிகளு;ககு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற  புலி ஆதரவு அமைப்புக்களை தடை செய்ததனைப் போன்று இலங்கை அரசாங்கமும் தடை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும் இணைந்து செயற்படுவதாகவும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிவினைவாதத்திற்கு எதிராக அரசாங்கம் நிலையான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு பொருத்தமற்றது எனவும் அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசாங்கத்தின் ஊடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உதாரணமாக தமிழ் முஸ்லிம் பிரதமர்களை நியமிக்க முடியும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அனைத்து இனங்களை ஒருங்கிணைந்து இலங்கை தேசிய அடையாளத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...